மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வாரச்சந்தை விழாவில் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டதால் ஆசிரியர்கள் மாணவர்களை பாரட்டினர்.
மூங்கில்துறைப்பட்டு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களின் அறிவுதிறனை வளர்க்கும் விதமாக தமிழ் மன்றம், அறிவியல், ஆங்கில மன்றம், கணித மன்றம், பொருளாதார மன்றம் ஒவ்வொரு பாடத்திற்கு ஏற்றவாறு மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.மாணவர்களை ஒரு குழுவாக அமைத்து அவர்களின் திறன்களை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பள்ளியில் நடந்த வணிக மன்றத்தில் மாணவர்கள் வாரச்சந்தை அமைத்து செயல்பட்டனர். இதில் மாணவர்கள் தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், கீரைகளை கொண்டுவந்து சந்தை அமைத்தனர். இவற்றினை பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராசு துவக்கி வைத்தார்.துணை தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, முதுநிலை ஆசிரியர்கள் செந்தில், குமார்,பட்டதாரி ஆசிரியர்கள் அண்ணாமலை, சந்திரிகா,சாந்தி, ஆதிலட்சுமி,மேரிலில்லி கிளாரா, ஜாக்குலின் சகாயராணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் நடத்திய வாரச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளை, ஆசிரியர்கள் வாங்கிச் சென்றனர்.