பொது செய்தி

தமிழ்நாடு

பிட் நியூஸ்... ஜெட் வேகம்!

Added : நவ 29, 2019
Advertisement

ஏமாற்று வேலையா க்யூ.ஆர்., கோடுமறுசுழற்சி செய்யத்தக்க பிளாஸ்டிக் பை என்ற முத்திரையோடு, க்யூ.ஆர்., கோடு இணைத்து, பல ஓட்டல்களில் உணவு பொட்டலங்கள், பார்சல் செய்து கொடுக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் பையில் உள்ள க்யூ.ஆர்., கோடு, 'ஸ்கேன்' செய்ய முடிவதில்லை. மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், ஆய்வில் ஈடுபடும்போது, இதுபோன்ற பிளாஸ்டிக் பைகளில் உள்ள க்யூ.ஆர்., கோடு 'ஸ்கேன்' செய்து பார்த்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.கவர்ந்திழுக்கும் போஸ்டர்கோவை நேரு விளையாட்டரங்கில், 'புட் பால் ஐ லீக்' கால்பந்து போட்டி துவங்க இருக்கிறது. முதல் போட்டி, வரும் ஞாயிறன்று இரவு நடைபெறுகிறது; 'இம்பால்' அணியும், 'சென்னை சிட்டி புட்பால் கிளப்' அணிகளும் மோதுகின்றன. இதற்கான போஸ்டர், 'வேற லெவல் கிக் ஆப்' என்ற தலைப்பில், நகர வீதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. அவை, சினிமா போஸ்டர்களை மிஞ்சும் அளவுக்கு பார்வையாளர்களை கவர்கிறது. கால்பந்து ரசிகர்களிடம் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.தரம் பிரித்து கொடுக்குறாங்களா?மக்கும், மக்காத குப்பையை மக்கள் தரம் பிரித்து, சுகாதார பணியாளர்களிடம் வழங்குவதை, மேற்கு மண்டலம், 24வது வார்டு சுந்தரம் வீதியில் மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் நேற்று நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து, தடாகம் ரோடு பொன்னையராஜபுரம் பகுதி மக்களிடம், துாய்மைப்பணி, டெங்கு தடுப்பு பணிகளை கேட்டறிந்தார்.இன்னமும் இருக்கு பெட்டி!பாலம் வேலை நடப்பதால், ஆத்துப்பாலத்தில் இருந்த சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டது. ஆனால், சுங்கம் வசூலிக்க அமைக்கப்பட்ட பெட்டிகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. அதனால், ரோட்டின் இருபுறமும் உள்ள வீதிகளில் இருந்து இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர் குறுக்கும் நெடுக்குமாக செல்கின்றனர். உக்கடத்தில் இருந்து வருவோர் விபத்தில் சிக்குகின்றனர். சுங்கச்சாவடி மையத்தை அகற்றி, மையத்தடுப்பு கற்கள் அமைத்தால், பிரச்னை தீரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X