மஹா., முதல்வராக பொறுப்பேற்றார் உத்தவ் :இன்று நடக்குமா நம்பிக்கை ஓட்டெடுப்பு?

Updated : நவ 30, 2019 | Added : நவ 29, 2019
Share
Advertisement
புதுடில்லி :மஹாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே நேற்று பொறுப்பேற்றார். சட்டசபையில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தவ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.மஹாராஷ்டிரா முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையில் உள்ள தலைமைச் செயலகமான மந்திராலயாவுக்கு நேற்று வந்தார்.அங்கு வைக்கப்பட்டிருந்த சத்திரபதி சிவாஜி

புதுடில்லி :மஹாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே நேற்று பொறுப்பேற்றார். சட்டசபையில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தவ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மஹாராஷ்டிரா முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்ற சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையில் உள்ள தலைமைச் செயலகமான மந்திராலயாவுக்கு நேற்று வந்தார்.அங்கு வைக்கப்பட்டிருந்த சத்திரபதி சிவாஜி மஹாராஜ் புகைப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்திய பின் எட்டாவது மாடியில் உள்ள முதல்வர் அலுவலகத்துக்கு வந்த அவர் முதல்வர் பொறுப்பை ஏற்றார். தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.முன்னதாக மும்பையில் உள்ள தன் வீட்டிலிருந்து தலைமைச் செயலகத்துக்கு காரில் வந்த உத்தவ் தாக்கரேவுக்கு வழி நெடுகிலும் சிவசேனா கட்சியினர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.சில மாதங்களுக்கு முன் மும்பையில் ஆரே பகுதியில் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் வாகன நிறுத்தம் அமைக்க ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்த வாகன நிறுத்தம் அமைப்பதற்கு தடை விதிப்பதாக முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று அறிவித்தார்.நம்பிக்கை ஓட்டெடுப்பு? டி.,3ம் தேதிக்குள் சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு மஹாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து சட்டசபையில் இன்று நம்பிக்கை ஓட்டு கோர முதல்வர் உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபையில் தனிப் பெரும்பான்மைக்கு 144 உறுப்பினர்கள் தேவை.'சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் உள்ள இதர கட்சிகளுக்கு மொத்தம் 162 உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால் நம்பிக்கை ஓட்டெடுப்பில் உத்தவ் தாக்கரே எளிதாக வெற்றி பெறுவார்' என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் பா.ஜ. வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது:உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் முதல் முறையாக நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.ஆனால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பது எப்படி என்பது குறித்து விவாதித்துள்ளனர். உத்தவ் அரசின் முதல் நடவடிக்கையே ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அவர்கூறினார்.சிவசேனா ஆட்சிக்கு எதிரான மனு தள்ளுபடி

அகில பாரத ஹிந்து மகாசபா அமைப்பைச் சேர்ந்த பிரகலாத் ஜோஷி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டதாவது:மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ. - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கவே மக்கள் ஓட்டளித்தனர். ஆனால் மக்கள் விருப்பத்துக்கு மாறாக சிவசேனா, காங்., தேசியவாத காங். கட்சிகள் ஒருங்கிணைந்து ஆட்சி அமைத்துள்ளன. இதை செல்லாது என அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: அரசமைப்பு சட்டத்தின் அறநெறி என்பது அரசியல் அறநெறியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கு ஜனநாயகத்தில் உரிமை உள்ளது; அதற்கு நீதிமன்றம் தடை விதிக்க முடியாது.தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என்ற அரசியல் ஜனநாயகத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்; இதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது.தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும்படி அரசியல் கட்சிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X