சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உளுந்துார்பேட்டையில் காயமடைந்த குதிரை

Added : நவ 29, 2019
Advertisement
 உளுந்துார்பேட்டையில் காயமடைந்த குதிரை

உளுந்தூர்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே காயமடைந்த குதிரையை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தன்னார்வலர்களை பொது மக்கள் பாராட்டினர்.

உளுந்தூர்பேட்டை அடுத்த அஜிஸ் நகர் அருகே கடந்த 10 நாட்களாக குதிரை ஒன்று அடிபட்டதால், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. நடக்க முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த, குதிரையை யாரும் கண்டும் காணாமல் இருந்து வந்தனர்.இந்நிலையில், குதிரையின் நிலையை கண்டு, உளுந்தூர்பேட்டை தாலுகா எடைக்கல் போலீஸ் நிலைய போலீஸ்காரர் எங்கள் துரை, உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர் குடியரசுமணி ஆகியோர் குதிரையை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக சமூக ஆர்வலர்கள் சிவக்குமார், ராயர் உள்ளிட்டவர்களின் உதவியோடு, மினி டெம்போவை வரவழைத்தனர். அதில், காயமடைந்த குதிரையை ஏற்றி, புதுச்சேரி கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.பின்னர் புதுச்சேரியிலுள்ள தொண்டு நிறுவனம் மூலம், அங்கிருந்து குதிரை மேல் சிகிச்சைக்காக சென்னை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்ப்பட்டது.

காயமடைந்த குதிரையை, போலீஸ்காரர் மற்றும் தன்னார்வலர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த சம்பவம், அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X