பொது செய்தி

தமிழ்நாடு

வறுத்தெடுத்த மீனும்

Added : நவ 29, 2019
Advertisement
 வறுத்தெடுத்த மீனும்

'வறுத்தெடுத்த மீனும், வஞ்சிர மீன் குழம்பும், சுடச்சுட சோறும் இருந்தால் போதும்; எனக்கு சொர்க்கம் கூட வேண்டாம்' என, கிராமங்களில் சொல்வதுண்டு. மீன் உணவுகளை ரசித்து உண்பவர்களுக்கு தெரியும், மீன் குழம்பு வாசம் மூக்கில் நுழைந்தாலே, நாக்கில் எச்சில் தானாக ஊறும்.அசைவ உணவு வகைகளில், மீனுக்கு முக்கிய பங்கு உண்டு. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் சாப்பிடலாம் என்கின்றனர், மருத்துவர்கள். அதற்கு முக்கிய காரணம், மீனில் உள்ள கொழுப்பு அமிலம், உடல் எடையை குறைப்பதோடு, இதயத்தை பாதுகாக்குமாம்.கோவையில், மீன் பிரியர்களுக்கு என்றே, அவிநாசி ரோடு, நவஇந்தியா அருகில், 'நெய்தல்' என்ற பெயரில் சிறப்பு உணவகம் நடத்தப்படுகிறது. அங்கு, கண்ணாடி தொட்டியில் நீந்திக் கொண்டிருக்கும் மீனை நாமே பிடித்துக் கொடுத்தால், அடுத்த, 10வது நிமிடம் வறுத்தெடுத்து, வாசனை கமகமக்க, நாம் அமர்ந்திருக்க, டேபிளில் கொண்டு வந்து வைக்கின்றனர்.மீன் குழம்பு, வறுவல் என, 100க்கும் மேற்பட்ட வெரைட்டிகள் சுவையாக கிடைக்கின்றன. இவற்றுடன், சிக்கன், மட்டன் மற்றும் பிரியாணி ஐட்டங்களும், வெஜிடேரியன் ஐட்டங்களும் உண்டு. வசதியானவர்கள் மட்டுமல்ல, 100 ரூபாய் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கூட மீன் உணவு வகைகளை ருசிக்கலாம்.வாடிக்கையாளர் நவீன்குமார் கூறுகையில், ''நான் மீன் பிரியன். வாரத்தில் ஒருநாள் இங்கு வந்து சாப்பிடுகிறேன். சுவையாகவும், பட்ஜெட்டுக்கு ஏற்பவும் கிடைக்கிறது,'' என்றார்.நெய்தல் உணவகத்தின் நிர்வாக இயக்குனர் அபிலாஷ் கிருஷ்ணன் கூறும்போது, ''நாங்கள் வறுக்காத மீன், ஜாமீன் மட்டும்தான். ''கடலில் இருக்கும் அத்தனை வகை மீனையும் பிடித்து வந்து சுவையாக சமைத்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறோம். எங்களுக்கு ரெகுலர் 'கஷ்டமர்ஸ்' அதிகம். அவர்களை 'கஸ்டமர்'களாக பார்ப்பதில்லை; உறவினர்களாக நினைத்து உபசரித்து வருகிறோம். விரைவில் இன்னொரு கிளை திறக்க இருக்கிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X