பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் சுய உதவி குழுவுக்கு கடன் வழங்கி ரெப்கோ சாதனை

Added : நவ 29, 2019
Advertisement

கோவை:மகளிர் சுய உதவிக்குழு பயனாளிகளுக்கு கடன் வழங்குவதில், 'ரெப்கோ' நுண்கடன் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.அந்நிறுவன இயக்குனர் பாலசுப்ரமணியன் அறிக்கை:மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு, இதுவரை, 4,000 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. நடப்பு நிதியாண்டில், 1,300 கோடி ரூபாய் இலக்குடன் பிற மாநிலங்களிலும், நுண்கடன் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.அதிக அளவில் மகளிர் சுய உதவி குழு பயனாளிகளுக்கு நுண்கடன் வழங்கியதற்காக, கடந்த மூன்று ஆண்டுகளாக, 'நபார்டு' விருது, 5 முறை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன விருது, கடந்தாண்டு அகில இந்திய அளவில் ஸ்காட்ச் விருது பெற்றுள்ளோம். சென்னை மாநகராட்சியில், மகளிர் சுய உதவி குழு பயனாளிகளுக்கு, அதிக அளவில் நுண்கடன் வழங்கியதற்கான விருதை, தண்டையார்பேட்டை கிளை தொடர்ந்து பெற்று வருகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X