சென்னை,: அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினருடன் தொழிலாளர் நலத்துறை கமிஷனர் நடத்திய பேச்சில் உடன்பாடு எட்டப்படாததால் டிசம்பர் 18க்கு ஒத்தி வைக்கப்பட்டது.அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் 'ஸ்டிரைக் நோட்டீஸ்' கொடுத்துள்ளதை அடுத்து தொழிலாளர் துறை துணை கமிஷனர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்கள் முன்னிலையில் தொழிற்சங்கத்தினரை பலமுறை அழைத்து பேச்சு நடத்தினார். அதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் நேற்று தொழிலாளர் கமிஷனர் நந்தகோபால் சமரச பேச்சில் ஈடுபட்டார்.அதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. சமரச பேச்சு டிச. 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.