பொது செய்தி

தமிழ்நாடு

கீதம்... சங்கீதம்...!100 நாடுகளின் தேசிய கீதம்

Added : நவ 29, 2019
Advertisement
 கீதம்... சங்கீதம்...!100 நாடுகளின் தேசிய கீதம்

கீ போர்டில் விரல்கள் விளையாட, டிரம்ஸ் ஓசையோடு காற்றில் கரைந்த இசை, காதுகளை கடந்து, மனதையும் இதமாக்குகிறது. கிட்டத்தட்ட, 100 நாடுகளின் தேசிய கீதங்களை இசைத்து, புருவங்களை உயரச்செய்தனர் சகோதரர்கள்.இதில், ரத்தினம் கல்லுாரியில் இரண்டாமாண்டு படிக்கும் சந்தோஷ், ''திருக்குறள் முதல் நேற்று ரிலீசான புதுப்படம் வரை, எந்த பாடலுக்கும் இசையமைப்போம்,'' என்கிறார் பெருமிதத்தோடு!''மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, தேசிய கீதத்துக்கு இசையமைத்தேன். ஆறாம் வகுப்பில் இருந்து, இசை சார்ந்த போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். தந்தை ரவீந்திரன், எனக்கு குரு. நான் பிறக்கும் முன்பே, கீ போர்டு வாங்கி வைத்துள்ளார். பிறந்தநாள் பரிசு கூட, பெரும்பாலும் இசை சார்ந்ததாகவே இருக்கும்.''இசையமைப்பாளராக்கி விட வேண்டுமென்பது அவரது ஆசை; எனக்கு லட்சியம். குறும்படங்களுக்கு இசையமைத்து வருகிறேன். கதை கூறினால், அதற்கான பின்னணி இசை உருவாக்குவேன். திகில் படங்களுக்கான புதுவித இசையை உருவாக்கியுள்ளேன்,'' என்கிறார் சந்தோஷ்.கால்களும், கைகளும் டிரம்சுடன் பரபரப்பாக இருந்த நிதின், தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர். அண்ணனை போல் இல்லாமல், பைலட் ஆகும் கனவுடன், ஹாபியாக இசை கருவிகள் வாசித்தலை கற்று வருகிறார், இவர். இருவரும் இணைந்து, இரண்டு மணி நேரத்துக்கும் மேல், இசை கருவிகளால் அரங்கை நிரப்புகின்றனர்.ஆஸ்திரேலியா, சீனா, ஆஸ்திரியா, ஜெர்மனி உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கின்றனர். கின்னஸ் சாதனை புத்தகத்தில், தங்களது பெயர் இடம் பெற முற்படும் இருவருக்கும் வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றோம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X