எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய மூவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய மூவர் கைது

Added : நவ 29, 2019

கோவை:கோவை எலக்ட்ரிக்கல் கடையில் திருடிய மூவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.காட்டூர், சோமசுந்தரம் நகரை சேர்ந்தவர் மதன்ராஜ்,48; எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். கடந்த, அக்., 7ல், மர்ம கும்பல் கடைக்குள் புகுந்து, அங்கிருந்த இரண்டு லட்சம் ரூபாயை திருடிச் சென்றனர். காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.கோவை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், சந்கேத்தின் பேரில் நின்று கொண்டிருந்த மூவரை விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பேசினர். காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரிக்கையில், கர்நாடகா, மங்களூரை சேர்ந்த சுரேஷ் நெருலா,47, ஆந்திரா, அனந்தபூரை சேர்ந்த தனஞ்செயன்,33, செய்யது அகமது,31, என்பதும், எலக்ட்ரிக்கல் கடையில் திருடியதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X