பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை அள்ளுவதற்கு 5,200 பேருக்கு ஆசை

Added : நவ 29, 2019
Advertisement

கோவை:கோவை மாநகராட்சியில், காலியாக உள்ள துப்புரவு பணியிடத்துக்கு மூன்று நாட்கள் நடந்த நேர்காணலில், 5,200 பேர் பங்கேற்றனர்.கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள, 549 துப்புரவு பணியாளர் பணியிடத்துக்கு, தமிழ் எழுத படிக்கத்தெரிந்த, 21 வயதுடைய அனைத்து ஜாதியினரும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. 7,300 பேர் விண்ணப்பித்திருந்தனர். தகுதியான, 6,900 பேருக்கு நேர்காணல் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.கடந்த, 27 முதல் நேற்று வரை மூன்று நாட்கள் நேர்காணல் நடந்தது. முதல் நாள் அழைப்பு விடுக்கப்பட்ட, 3,000 பேரில், 2,600 பேர் பங்கேற்றனர். இரண்டாம் நாள் அழைக்கப்பட்ட, 3,000 பேரில், 2,110 பேரும், மீதமுள்ள, 900 பேரில், 490 பேரும் பங்கேற்றனர். உதவி கமிஷனர்கள், நிர்வாக அதிகாரிகள், விண்ணப்பதாரர்களின் சான்றிதழை சரிபார்த்து, நேர்காணல் நடத்தினர்.பி.இ., - பி.டெக்., பட்டதாரிகள், இளங்கலை, முதுநிலை பட்டதாரிகள் அதிகமானோர் பங்கேற்றனர். பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. துப்புரவு பணியானாலும் அரசு வேலை என்பதால் நேர்காணலில் கூட்டம் அலைமோதியது.வடக்கு மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமார் ரத்தினம் கூறுகையில், ''நேர்காணல் பணியில் எட்டு உதவி கமிஷனர்கள், இரண்டு நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர். 'டேட்டா' பணி முடிந்தவுடன், தகுதி மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்படுவர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X