பொது செய்தி

தமிழ்நாடு

கேமரா கண்காணிப்பில் சரவணம்பட்டி ஏரியா!

Added : நவ 30, 2019
Advertisement

சரவணம்பட்டி:சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள், 45 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.சரவணம்பட்டியில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. குற்றங்கள், விபத்து நடப்பதை கண்காணிக்க, தனியார் நிறுவனங்களின் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பொருத்தி வருகின்றனர். சரவணம்பட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, 45 இடங்களில் பொருத்தியுள்ள கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைக்கும் விழா நேற்று நடந்தது.அதில், மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் பேசுகையில், ''கோவை நகரில் உள்ள அனைத்து பகுதிகளையும் கேமராக்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது. சென்னைக்கு அடுத்து பெரிய நகரமாக கோவை உள்ளது. குற்றங்கள் நடப்பதை தடுக்கவும், குற்றவாளிகளை விரைவாக பிடிக்கவும் கேமரா கண்காணிப்பு அதிகரிக்கப்படுகிறது. இரவு நேரத்திலும் துல்லியமாக கண்காணிப்புகளை மேற்கொள்ள முடியும். இவை, மாநகர மத்திய கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.போலீஸ் துணை கமிஷனர்கள் பாலாஜி சரவணன், உமா, முத்தரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X