சிதம்பரம் : இறந்த ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் கண்கள், உடல் தானம் செய்யப்பட்டது.
சிதம்பரம் வடக்கு வீதியில் வசித்தவர் பாலசுப்ரமணியன், 78; ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர். இவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். தகவல் அறிந்த தன்னார்வ ரத்ததான கழகத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் இறந்த பாலசுப்ரமணியன் உறவினர்களிடம் கண்கள், உடல் தானம் செய்ய சம்மதம் பெற்றனர்.மருத்துவர்கள் பாசித் அலி, பாலசுப்ரமணியன் ஆகியோர் கண்களை தானமாக பெற்று, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலசுப்ரமணியன் உடல், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
மற்றொரு கண் தானம்சிதம்பரம் கனகசபை நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி பாய், 74; வயது முதிர்வு காரணமாக இறந்தார். இவரது கண்களை உறவினர்கள் சம்மதத்துடன், டாக்டர் சோனாபாபு தானமாக பெற்று, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE