கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வி.ஏ.ஓ.,க்கள் வழக்கு: தமிழக அரசுக்கு உத்தரவு

Added : நவ 30, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை :'விதிகளை மறு ஆய்வு செய்ய நடைமுறை சிக்கல்களை கூறி வி.ஏ.ஓ.க்கள் மனு அளித்தால் அதை சட்ட விதிகளுக்கு உட்பட்டு தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கிராம நிர்வாக அலுவலர்களான ஆர்.சுதா எஸ்.சசிகலா உட்பட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:தமிழ்நாடு அமைச்சு பணியாளர்கள் விதிப்படி வி.ஏ.ஓ. என்ற கிராம நிர்வாக

சென்னை :'விதிகளை மறு ஆய்வு செய்ய நடைமுறை சிக்கல்களை கூறி வி.ஏ.ஓ.க்கள் மனு அளித்தால் அதை சட்ட விதிகளுக்கு உட்பட்டு தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கிராம நிர்வாக அலுவலர்களான ஆர்.சுதா எஸ்.சசிகலா உட்பட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:தமிழ்நாடு அமைச்சு பணியாளர்கள் விதிப்படி வி.ஏ.ஓ. என்ற கிராம நிர்வாக அதிகாரிகள் தாங்கள் பணிபுரியும் கிராமங்களில் கட்டாயம் வசிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த விதிகளை கண்டிப்பாக அமல்படுத்த உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இதன்படி பணிபுரியும் கிராமங்களில் வசிக்காத வி.ஏ.ஓ..க்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த உத்தரவு பெண் வி.ஏ.ஓ.க்களின் மாதவிடாய் காலம், குடும்பம், குழந்தைகள் கல்வி போன்ற நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொள்ளாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல வி.ஏ.ஓ.க்கள் மனதளவிலும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே பணிபுரியும் கிராமங்களில் இல்லாமல் அடிப்படை வசதிகள் நிறைந்த அருகில் உள்ள கிராமங்களில் வசிக்க வி.ஏ.ஓ.க்களை அனுமதிக்கும் வகையில் விதிகளை மறுஆய்வு செய்ய வேண்டும். அதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் நவீன்குமார் மூர்த்தியும் அரசு தரப்பில் வழக்கறிஞர் சிவசண்முக சுந்தரமும் வாதாடினர்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பிறப்பு, இறப்பு உட்பட பல்வேறு பணிகளை காலை 8:00 மணிக்கு துவங்கி இரவு 8:00 மணி வரை வி.ஏ.ஓ.க்கள் மேற்கொள்கின்றனர். இவர்களது பணி அரசு நிர்வாகத்துக்கு மிகவும் முக்கியமானது. எனவே மனுதாரர்கள் நடைமுறை சிக்கல்களை கூறி அரசுக்கு மனு அளிக்க வேண்டும். அதை தமிழக அரசு சட்ட விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
30-நவ-201903:12:51 IST Report Abuse
.Dr.A.Joseph சகாயம் IAS அவர்களை நோகடிக்க முயல்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X