பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்ட டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு

Added : நவ 30, 2019
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட டி.ஆர்.ஓ.,வாக நேற்று சங்கீதா பொறுப்பேற்றுக் கொண்டார்.கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை தமிழக முதல்வர் பழனிச்சாமி கடந்த 26ம் தேதி துவக்கி வைத்தார்.

இதனையடுத்து, கலெக்டர் கிரண்குராலா, எஸ்.பி., ஜெயக்குமார் ஆகியோர் அலுவலகம் தொடர்பான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக சங்கீதா நியமிக்கப்பட்டார். சென்னை ஆவின் பொது மேலாளராக பணிபுரிந்த சங்கீதா, தற்காலிகமாக பொதுப்பணித்துறை அலுவலகத்தில்(நீர் ஆதாரம்) கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர், டி.ஆர்.ஓ., நிருபர்களிடம் கூறும் போது, '' கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர், மேற்கொள்ள வேண்டிய அனைத்து பணிகளையும் சிறப்புடன் செயல்படுத்துவேன். பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட டி.ஆர்.ஓ., விற்கு திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., சாய்வர்தனி, தேர்தல் தனி தாசில்தார் காதர்அலி, அலுவலக மேலாளர்(குற்றவியல்) வெங்கடேசன், அலுவலக மேலாளர்(பொது) இந்திரா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X