சபரிமலை,சபரிமலைக்கு என்பீல்டு புல்லட் பைக்கில் செல்ல விரும்பும் பக்தர்களுக்கு கேரள மாநிலம் செங்கன்னுாரில் வசதி செய்யப்பட்டுள்ளது.கொச்சியை தலைமையிடமாக கொண்ட 'கபே ரைட்ஸ்' என்ற நிறுவனம் வாகனங்களை வாடகைக்கு விடுகிறது. செங்கன்னுார் ரயில் நிலையத்தில் இருந்து பக்தர்களுக்கு இந்த வசதி செய்து கொடுக்கப் படுகிறது. பக்தர்கள் அடையாள அட்டையின் அசல், நகல் வைத்திருக்க வேண்டும். 24 மணி நேர வாடகை ரூ.1,200.200 கி.மீ., வரை இந்த கட்டணம். அதற்கு மேல் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.6 செலுத்த வேண்டும்.இந்த வசதியை நேற்று கொல்லம் ரயில்வே வணிக ஆய்வாளர் ராஜிவ், துணை மேலாளர் எபிதாமஸ், ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ. மணிகண்டன் தொடங்கி வைத்தனர்.