பொது செய்தி

தமிழ்நாடு

சிந்திக்க வைத்தது தோல் பாவை கூத்து !

Added : நவ 30, 2019
Advertisement
 சிந்திக்க வைத்தது தோல் பாவை கூத்து !

பல்லுயிர் பெருக்கு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள, கோவை சிங்காநல்லுார் குளத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து, 'கியூப்' அமைப்பு சார்பில், ஓக் கேனாபி குடியிருப்பு சமுதாய கூடத்தில், தோல்பாவை கூத்து நேற்று நடத்தப்பட்டது.அதில், சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற, தோல் பாவை கூத்து கலைஞர் முத்து லட்சுமண ராவ், பொதுமக்கள் ரசித்து பார்க்கும் வகையில், சிறப்பாக நிகழ்த்திக் காட்டினார்.அவரிடம் பேசியதில் இருந்து...தோல் பாவை கூத்து என்கிற நிகழ்த்து கலை, பழம் பெரும் கலைகளில் முக்கியமானது. படிப்பறிவு இல்லாத காலத்தில், கிராம மக்கள் மத்தியில், ராமாயணம், மகாபாரதம், அரிச்சந்திரா போன்ற புராண கதைகளை தோல் பாவை கூத்து வழியாகவே மக்களுக்கு கொண்டு சென்றனர்.சினிமா வந்த பிறகு, இக்கலை அழியத்துவங்கியது. இன்றைக்கு இந்த கலை, 90 சதவீதம் அழிந்து விட்டது. இது, எங்களுக்கு குடும்ப தொழில் என்பதால், ஐந்து தலைமுறையாக செய்து வருகிறோம். நான்தான் கடைசி.இக்கலை அழியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, சுற்றுச்சூழல் மற்றும் சமூகம் சார்ந்த விழிப்புணர்வு கருத்துகளை பாவை கூத்து வழியாக மக்களிடம் பிரசாரம் செய்து வருகிறேன்.
பிளாஸ்டிக் ஒழிப்பு, குளங்கள் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, விபத்து பாதுகாப்பு போன்ற விஷயங்களை கதைகளாக உருவாக்கி, நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன்.பல்லுயிர்களின் வாழ்விடமாக விளங்கும் சிங்காநல்லுார் குளத்தின் பாதுகாப்பு, இக்குளத்தின் சிறப்பம்சம் மற்றும் இங்குள்ள பல்லுயிர்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றி இக்கூத்து வழியாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினேன். என் பணியை பாராட்டி, தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்துள்ளது, என, மகிழ்ச்சிடன் கூறுகிறார் இந்த மகா கலைஞன்.இவரை தொடர்பு கொள்ள, 99440 67083

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X