பொது செய்தி

இந்தியா

சபரிமலை தரிசனத்திற்கு குமுளியில் முன்பதிவு மையம்

Added : நவ 30, 2019
Advertisement
சபரிமலை தரிசனத்திற்கு   குமுளியில் முன்பதிவு மையம்

கூடலுார் :சபரிமலையில் தரிசனம் செய்ய குமுளியில் முன்பதிவு மையம் துவங்கப்பட்டுள்ளது.சபரிமலை தரிசனத்திற்கு கேரள போலீஸ் விர்ச்சுவல் க்யூ' என்ற முன்பதிவு இணைய தளத்தை நடத்தி வருகிறது. சபரிபீடத்தில் இருந்து தனி பாதை மூலம் இவர்கள் சன்னிதானம் செல்லலாம்.ஆனால் ஆன்லைன் முன்பதிவு மிகவும் விரைவாக முடிந்து விடுகிறது. எனவே நேரில் வரும் பக்தர்கள் வசதிக்காக முன்பதிவு மையத்தை கேரளா, இடுக்கி மாவட்டம் குமுளியில் 65 ம் மைல் என்ற இடத்தில் கட்டப்பனை டி.எஸ்.பி., ராஜ்மோகன் துவக்கி வைத்தார். குமுளி ஊராட்சி தலைவர் ஷீபா , இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த மையத்தில் முன்பதிவு செய்து பக்தர்கள் விரைவான தரிசனம் செய்யலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X