சபரிமலை சபரிமலை சன்னி தானத்தில் என்.எஸ்.எஸ். (நாயர் சர்வீஸ் சொசைட்டி) இலவச மருத்துவமனை திறக்கப்பட்டது.மாளிகைப்புறம் கோயில் எதிரில், பாண்டித் தாவளம் செல்லும் பகுதியில் அமைந்துள்ள இதனை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பந்தளம் என்.எஸ்.எஸ். மெடிக்கல்மிஷன் மருத்துவமனை டாக்டர் ஜோதிபாபு, இதன் மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.பெண்களை அனுமதிக் கும் விஷயத்தில் அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு இந்த மருத்துவமனை திறக்கப்படவில்லை.