சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் போன் கடையில் தொடர் திருட்டு

Added : நவ 30, 2019
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் சீருடையில் வரும் சிறுவர்கள், மொபைல்போன் கடையை உடைத்து திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம், பெரியார் நகர், இளங்கோவடிகள் தெருவை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 36; பெரியார் நகர் பஸ் நிறுத்தம் அருகே மொபைல்போன் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்ற அவர், நேற்று காலை, கடையை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மொபைல் போன்கள், மெமரி கார்டுகள் திருடுபோனது தெரிய வந்தது.

இதேபோல், இவரது கடையில், கடந்த மாதம் 30ம் தேதி இரவு, ஒன்றரை லட்சம் மதிப்பிலான மொபைல் போன்கள், 8 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடு போய் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தகுமார், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களின் பதிவுகளை பார்த்தார். அதில், சீருடை அணிந்த இருவர் உட்பட மூன்று சிறுவர்கள், மொபட்டில் வருகின்றனர். சீருடை அணிந்த இருவர் மட்டும் கடையை உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்த பொருட்களை திருடுவதும், மற்றொரு சிறுவன் நோட்டமிட்டபடி வெளியே நிற்பதும் தெரிகிறது.

ஒரு மணி நேரத்திற்கு பின், மூவரும் மொபட்டில் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. தகவலறிந்த விருத்தாசலம் குற்றப்பிரிவு போலீசார் விரைந்து வந்து, சி.சி.டி.வி., காட்சிகளை பெற்று விசாரித்து வருகின்றனர். ஒரே மொபைல்போன் கடையில் தொடர்ச்சியாக இரண்டு முறை திருடப்பட்ட சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X