சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடுத்தடுத்து வாகன விபத்து: வாலிபர் பரிதாப பலி

Added : நவ 30, 2019
Advertisement

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை நகர் ரயில்வே மேம்பால தடுப்பு சுவர் மீது அரசு பஸ் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.மற்றொரு விபத்தில் ஒருவர் இறந்தார்.

மதுரையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் (டி.என்.ஏ 63, என்.1893) நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை,மதுரை பரமக்குடி பகுதியை சேர்ந்த ராஜ்குமார், 44; ஓட்டியுள்ளார்.இந்த பஸ்சில், 10 பயணிகள் மட்டுமே இருந்துள்ளனர். இந்த பஸ், நேற்று அதிகாலை 3.15 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகர் ரயில்வே மேம்பாலம் அருகே சென்றுள்ளது.அப்போது, எதிரே வந்த பஸ்சின், முகப்பு விளக்கு எதிரொலியால் திடீரென அரசு பஸ்சின் டிரைவர், கட்டுப்பாட்டை இழந்ததால், மேம்பால தடுப்பு சுவர் மீது மோதி, கவிழ்ந்தது.

விபத்தில் சிக்கிய அரசு பஸ்சின் நான்கு சக்கரங்களும் தனியாக கழன்றுவிட்டது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த இரண்டு பேர், காயமடைந்து, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.விபத்து குறித்து, உளுந்தூர் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு விபத்துமதுரை எஸ். எஸ். காலனி பகுதியைச் சேர்ந்த குமார், 28; இவர், மதுரையிலிருந்து காரை ஓட்டிக்கொண்டு சென்னை நோக்கி வந்துள்ளார்.

நேற்று காலை 2.30 மணியளவில் உளுந்தூர்பேட்டை அடுத்த அஜீஸ் நகர் மேம்பாலம் அருகே கார் வந்த போது, முன்னே சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் காரில் சென்ற சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் நித்தியானந்தன், 36; என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.காரில் பயணம் செய்த, மதுரையை சேர்ந்த பிரசன்னா, 32; சசிகுமார், 18; செல்வம், 25; டிரைவர் குமார் ஆகியோர் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து குறித்து, உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஒரே இடத்தில் அடுத்தடுத்துநான்கு விபத்துக்கள் உளுந்தூர்பேட்டை பகுதிகளில் இருந்து நகர் ரயில்வே மேம்பாலம் நோக்கி வாகனங்கள் செல்லும்போது அகலமான நெடுஞ்சாலையில் இருந்து குறுகிய பாலத்தில் செல்லும்போது இரவு நேரத்தில் மேம்பால தடுப்பு சுவர் தெரியாததால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. மேலும், மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியவிடுவதில்லை.

இதனால் மேம்பாலம் எப்போதும் இருள் சூழ்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.உளுந்தூர்பேட்டை நகர் ரயில்வே மேம்பால தடுப்பு சுவர் மீது நேற்று அரசு பஸ் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதே இடத்தில் இதுவரை இரு சிமென்ட் லோடு லாரிகள், இரு அரசு பஸ்கள் என 4 வாகனங்கள் அடுத்தடுத்து விபத்தில் சி்க்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X