சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையை சீரமைக்க கோரி நாற்று நடும் போராட்டம்

Added : நவ 30, 2019
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கநாதபுரம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அக்கிராமத்தில் உள்ள நடுத்தெரு, கிழக்கு வீதி, மதுரை வீரன் கோவில் தெரு, மாதாகோவில் தெரு என அனைத்து தெருக்களிலும் கடந்த சில நாட்களாக பெய்த மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.இதனால், குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று சாலைகளில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கழிவு நீர் கால்வாய் அமைத்து சிமென்ட் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.போராட்டம் நடத்தியவர்களிடம், கள்ளக்குறிச்சி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்பிரகாசம் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன் பேரில், போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X