பொது செய்தி

தமிழ்நாடு

9 தொழில் நிறுவனங்களுடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம்

Added : நவ 30, 2019
Share
Advertisement
சென்னை :தமிழகத்தில் 5,027 கோடி ரூபாய் முதலீட்டில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஒன்பது தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஓட்டலில் இன்று மாலை 5:30 மணிக்கு தொழில் வளர் தமிழ்நாடு முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாட்டு அமர்வு நிகழ்ச்சி நடக்க

சென்னை :தமிழகத்தில் 5,027 கோடி ரூபாய் முதலீட்டில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஒன்பது தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஓட்டலில் இன்று மாலை 5:30 மணிக்கு தொழில் வளர் தமிழ்நாடு முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாட்டு அமர்வு நிகழ்ச்சி நடக்க உள்ளது.இந்நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் 5,027 கோடி ரூபாய் முதலீட்டில் 20 ஆயிரத்து 351 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஒன்பது தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மூன்று அமெரிக்க நிறுவனங்களின் திட்டங்களையும் 60 கோடி ரூபாயில் மூன்று உயர்நிலை திறன் மேம்பாட்டு மையங்களையும் முதல்வர் துவக்கி வைக்க உள்ளார்.இரண்டு புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் 28.43 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய லோகோ, தொழில் நிறுவனங்களின் குறைகளை தீர்க்க உதவும் 'தொழில் நண்பன்' இணையதளம் போன்றவையும் துவக்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X