புதுடில்லி,:'மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 2022ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.பார்லி., கூட்டத்தொடரில் சுகாதாரத்துறை சார்பில் வெளியான அறிக்கை:ரூ. 1264 கோடி மதிப்பிலான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதற்கு முதல்கட்டமாக ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனை 2022 செப்டம்பருக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.