தமிழ்நாடு

பொது பயன்பாட்டு மையத்தில் உற்பத்தி செயற்கை நூலிழை!ரூ.20 கோடியில் பல்லடத்தில் உருவாகிறது

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019
Advertisement
 பொது பயன்பாட்டு மையத்தில் உற்பத்தி செயற்கை நூலிழை!ரூ.20 கோடியில் பல்லடத்தில் உருவாகிறது

திருப்பூர்:-பல்லடத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், செயற்கை நுாலிழை உற்பத்திக்கான பொது பயன்பாட்டு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மையம் சார்பில், தொழில்குழுமம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், பல்லடத்தில் நேற்று நடந்தது. தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி மைய துணை இயக்குனர் அழகிரிசாமி தலைமை வகித்தார்.
சிறு, குறு நிறுவனத்துறை உதவி இயக்குனர் மற்றும் தொழில்குழும பொறுப்பாளர் பிரபு பேசியதாவது:ஒரே வகை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர், மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான பொதுபயன்பாட்டு மையங்கள் உருவாக்க மத்திய, மாநில அரசுகள் உதவுகின்றன.தொழில்குழுமம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீட்டில் 70 சதவீதம் மத்திய அரசும், 10 சதவீதம் மாநில அரசும் மானியமாக வழங்குகின்றன.பெரிய நிறுவனங்களுக்கு இணையாக, சிறிய நிறுவனங்களும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சிறந்த தரத்தில் பொருட்களை உருவாக்கும் நோக்கிலேயே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.தற்போது, பிற நாடுகளுடன் போட்டியிட வேண்டியுள்ளது. அதனால், 15 கோடியாக இருந்த பொது பயன்பாட்டு மையம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு உச்ச வரம்புத்தொகையும், 20 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.பல்லடத்தில், செயற்கை நுாலிழை உற்பத்திக்கான பொதுபயன்பாட்டு மையம் உருவாக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர், மேலாளர் திருஞானம் பேசியதாவது:பல்லடம் சுற்றுப்பகுதி செயற்கை நுால், துணி தயாரிப்பாளர்களை ஒருங்கிணைத்து, ரூ.20 கோடி மதிப்பீட்டில் பொது பயன்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது.செயற்கை நுால் தயாரிப்புக்கான மேம்படுத்தப்பட்ட துவக்க நிலை உற்பத்தி கட்டமைப்பு, ஆய்வகம், பாலியெஸ்டர், அக்ரலிக் போன்ற செயற்கை நுால் உற்பத்தி செய்யும் மெஷின்கள்; வர்த்தக பகுதிகளுடன் இந்த செயற்கை இழை தயாரிப்புக்கான பொது பயன்பாட்டு மையம் அமைக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X