சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீணாகும் பறிமுதல் வாகனங்கள்

Added : நவ 30, 2019
Share
Advertisement
மப்பேடு: மப்பேடு காவல் நிலையத்தில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும், வீணாகி வருகின்றன.கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில், மணல் கடத்தல், வழிப்பறி, விபத்து போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருசக்கர வாகனங்கள், கார், லாரி, மற்றும் சரக்கு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, காவல் நிலைய
 வீணாகும் பறிமுதல் வாகனங்கள்

மப்பேடு: மப்பேடு காவல் நிலையத்தில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும், வீணாகி வருகின்றன.கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில், மணல் கடத்தல், வழிப்பறி, விபத்து போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட இருசக்கர வாகனங்கள், கார், லாரி, மற்றும் சரக்கு வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.இதில், இருசக்கர வாகனங்களே அதிக அளவில் உள்ளன. இவ்வாறு நிறுத்தப்பட்ட வாகனங்கள் பாதுகாப்பில்லாமல் திறந்தவெளியில் நிறுத்தப்பட்டு உள்ளதால், வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் துருப்பிடித்து வீணாகி வருகின்றன.மேலும், வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களில், செடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது.இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங் களை முறையாக பராமரித்து, வழக்குகள் முடிந்த பின், உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது ஏலம் விட வேண்டும்.ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தப்பட்ட இந்த வாகனங்கள் மிகவும் துருப்பிடித்து வீணாகி வருகின்றன.எனவே, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங் களை உரியவர்களிடம் ஒப்படைக்கவோ அல்லது ஏலம் விடவோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X