பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளூர் புறவழிச்சாலை திட்டம் மாவட்ட நிர்வாகம் சுறுசுறுப்பு

Added : நவ 30, 2019
Advertisement

திருவள்ளூர்: திருவள்ளூர் புறவழிச்சாலை அமைய உள்ள இடத்தை, கையகப்படுத்தும் பணியில், மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

சென்னையில் இருந்து, திருப்பதி செல்லும் அனைத்து வாகனங்களும், திருவள்ளூர், ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை வழியாக கடந்து செல்கின்றன.5 கி.மீ., சாலைஇதனால், இச்சாலைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அரசு தலைமை மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், வங்கிகள், நீதிமன்றங்கள் உள்ளன.இங்கு வரும், நோயாளிகள், ஊழியர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இந்த நெரிசலை களைய, புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என, 10 ஆண்டுகளாக, சமூக ஆர்வலர்கள், வலியுறுத்தினர்.இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் -- திருவள்ளூர் சாலையில், மேல்நல்லாத்துாரில் இருந்து, கூவம் ஆற்றை கடந்து சேலை கிராமம் வழியாக, திருப்பாச்சூரை இணைக்கும் வகையில், 5 கி.மீட்டர் நீளத்திற்கு புறவழிச் சாலை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது.தமிழக அரசு, 'ஓகே'இத்திட்டத்தில், கூவம் ஆற்றைக் கடக்கவும், ரயில் தண்டவாளத்தைக் கடக்கவும், இரண்டு பாலங்கள் கட்ட, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.திருவள்ளூர் புறவழிச்சாலை திட்ட ஒப்புதலை பரிசீலனை செய்த தமிழக அரசு, இத்திட்டத்தினை செயல்படுத்த அனுமதி வழங்கி, நிலம் கையகப்படுத்த, இழப்பீடு தொகை வழங்கவும், திட்டத்தை நிறைவேற்றவும், 86.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இத்திட்டத்தின்படி, மேல்நல்லாத்துாரில், 1.11 கி.மீட்டர் நீளம்; பெரியகுப்பம் - 0.64 கி.மீட்டர்; சேலை கிராமத்தில் - 1.81 கி.மீட்டர் மற்றும் திருப்பாச்சூர் - 1.49 என, மொத்தம், 5.05 கி.மீட்டர் நீளத்தில், புறவழிச்சாலை அமையவுள்ளது.இந்த இடத்தினை, கலெக்டர் மகேஸ்வரி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின், நிலம் கையகப்படுத்தும் பணி மற்றும் இழப்பீடு தொகை வழங்கும் பணி குறித்து, நெடுஞ்சாலை துறையினருடன், ஆலோசனை நடத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X