பொது செய்தி

தமிழ்நாடு

சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்ப கட்டளை

Added : நவ 30, 2019
Advertisement

திருவாலங்காடு: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, கரும்பு அரவை, 1.34 லட்சம் டன்னாக, இந்த ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆலையின் மேலாண் இயக்குனர் ஆர்.சித்ரா கூறியதாவது:கடந்தாண்டை விட நடப்பாண்டில், விவசாயி கள் குறைந்த நிலப்பரப்பில் கரும்பு பயிரிட்டுள்ளனர். மழை இல்லாததால், கரும்பின் ஈரப்பதமும் குறைந்துள்ளது.நேற்று முன்தினம் வரை, 40 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் கரும்பு அரவையின் இலக்கை எட்டுவதற்கு விவசாயிகள் உதவ வேண்டும்.விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெட்டி, கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்ப வேண்டும். தனியார் ஆலைகளுக்கு எடுத்து செல்லக்கூடாது. இதற்கான வருவாய் கோட்ட அளவில், விவசாயிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X