பொது செய்தி

தமிழ்நாடு

போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

Added : நவ 30, 2019
Advertisement

கும்மிடிப்பூண்டி: கராத்தே மற்றும் 'ஸ்பெல் பீ' போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி நிர்வாகம் பாராட்டியது.

கவரைப்பேட்டை அடுத்த, பெருவாயல் பகுதியில் இயங்கி வரும், டி.ஜெ.எஸ்., பப்ளிக் பள்ளியில் பயிலும், 8ம் வகுப்பு மாணவர்கள், ஸ்ரீகாந்த், எழிலரசன்.இவர்கள், மாநில அளவில், பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கராத்தே போட்டியில், 'குமுட்டே' பிரிவில் பங்கேற்று, முறையே, இரண்டாம் மற்றும் நான்காம் இடம் பிடித்தனர்.அதேபோல், பள்ளிகளுக்கு இடையே நடத்தப்பட்ட, 'ஸ்பெல் பீ' என்ற ஆங்கில வார்த்தைக்கான, 'ஸ்பெல்லிங்' சொல்லும் போட்டியில், ஹேமாத்திரி, சாய்ரக்சிதா, பாவனேஷ், வர்ஷினி, ஆகியோர் வெற்றி பெற்றனர்.மேற்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை, டி.ஜெ.எஸ்., கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன், பள்ளியின் தாளாளர் தமிழரசன், முதல்வர் சுகதாடாஸ், துணை முதல்வர் ஜோதிமுருகன் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X