மின்னணு ஓட்டு இயந்திரம் குடோன் கட்ட அடிக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின்னணு ஓட்டு இயந்திரம் குடோன் கட்ட அடிக்கல்

Added : நவ 30, 2019

திருவள்ளூர்: ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கு, 5.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று நடந்தது.

திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் இயந்திரங்களை வைப்பதற்கு, 16,431 சதுர அடி பரப்பில், 5.50 கோடி ரூபாயில், புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று, நடந்தது. கலெக்டர் மகேஸ்வரி, அடிக்கல் நாட்டி வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்திலேயே, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கு புதிய கட்டடம், திருவள்ளூரில் கட்டப்பட உள்ளது.இதுவரை, இயந்திரங்கள் வைப்பதற்கு தனியார் வாடகை கட்டடத்திலும், அந்தந்த பகுதி தாசில்தார் அலுவலகத்திலும் வைக்கப்பட்டது.இதனால் ஏற்படும் நடைமுறை சிரமத்தை தவிர்க்க, தற்போது, 5.50 கோடி ரூபாயில், கட்டடம் கட்டப்பட உள்ளது. இங்கு, லிப்ட் வசதி, சோதனை கூடம், காவலர் தங்கும் அறை அமைக்கப்படும்.இக்கட்டடத்தில், 5,040 கன்ட்ரோல் யூனிட் இயந்திரம், 9,320 பேலட் யூனிட், 4,924 வி.வி.பேட் இயந்திரங்களை வைக்க முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, திருவள்ளூர் தாசில்தார் பாண்டியராஜன், உதவி செயற்பொறியாளர் (கட்டடம்) புண்ணியகோடி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X