பொது செய்தி

தமிழ்நாடு

மண் வரப்புகளை அமைத்தால், 30 லட்சம் லி., நீரை சேமிக்கலாம்

Added : நவ 30, 2019
Advertisement

திருப்பூர்:''மண் வரப்பு அமைப்பதன் மூலம், ஒரு ஏக்கர் நிலத்தில், 26 முதல், 30 லட்சம் லிட்டர் மழைநீரை சேமிக்கலாம்,'' என, திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ் பேசினார்.தேசிய வேலை உறுதி திட்டத்தில், விவசாய பணிகளையும் மேற்கொள்ள, தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. நுாறு நாள் திட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி, விவசாய நிலங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.இதுகுறித்து, நேற்றைய விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ் பேசியதாவது:விவசாய நிலங்களில், மண் ஏரி, பண்ணை குட்டை, தென்னைமரத்துக்கு வட்ட பாத்தி, சிறு தடுப்பணை போன்ற பணிகளை, நுாறு நாள் திட்டத்தில் இலவசமாக செய்யலாம். மழைநீரை சேமிப்பதன் மூலம், நிலத்தடி நீரையும், மண் வளத்தையும் மேம்படுத்தலாம்.தமிழகத்தின் சராசரி மழை, 949 மி.மீ., - திருப்பூரின் சராசரி மழை, 650 மி.மீ., மண் வரப்பு அமைப்பதன் மூலம், ஒரு ஏக்கர் நிலத்தில், 26 முதல், 30 லட்சம் லிட்டர் மழைநீரை சேமிக்கலாம். ஐந்து ஏக்கரில், ஒவ்வொரு ஆண்டும், 1.50 கோடி லிட்டரை சேமிக்க, முடியும். இதன்மூலம், மண் வளம் மேம்படும்.தென்னை மரத்தில் இருந்து, நான்கு அடி மற்றும் ஆறு அடிக்கு இடைப்பட்ட இடத்தில், பாத்தி அமைத்து தண்ணீர் விட வேண்டும். இதன்மூலம், நீர்பிடிப்பு வேர்களுக்கு நேரடியாக தண்ணீர் கிடைக்கும். மரம் வளர்ப்பு, மழைநீர் சேகரிப்பு என, நுாறு நாள் திட்டத்தில் பல்வேறு பலன்களை பெறலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.கலெக்டர் விஜய கார்த்திகேயன் பேசுகையில்,''விவசாயிகள், அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில், பட்டா, அடங்கல் விவரத்துடன் விண்ணப்பித்து, இத்திட்டத்தில் பயன்பெறலாம். மழைநீரை சேமித்து, நிலத்தடி செறிவூட்டலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X