சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தை, மகனுக்கு தண்டனை

Added : நவ 30, 2019
Advertisement

நகரி: கஞ்சா கடத்திய வழக்கில், தந்தை, மகனுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா, ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, சித்துார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சித்துார் மாவட்டம், புங்கனுாரைச் சேர்ந்தவர், கரிமுல்லா, 68. இவரது மகன் சையது அகமதுல்லா, 32.இவர்கள் இருவரும், புங்கனுார் டவுனில் இருந்து, பெத்ததிப்பசமுத்திரம் பகுதிக்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 44 கிலோ எடை உடைய கஞ்சா மூட்டைகளை, 2013ம் ஆண்டு, ஏப்ரல், 13ம் தேதி, ஆட்டோவில் கடத்தினர்.அப்போது, வாகன சோதனையில் இருந்த மதனப்பள்ளி போலீசாரிடம், இருவரும் சிக்கினர். மதனப்பள்ளி போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கின் இறுதி விசாரணை, சித்துார் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம், நீதிபதி வெங்கடஹரிநாத், தீர்ப்பு வழங்கினார்.இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கஞ்சா கடத்தல் குற்றவாளிகள், கரிமுல்லா, அவரது மகன் சையது அகமதுல்லா ஆகிய இருவருக்கு, தலா, 10 ஆண்டுகள் சிறையும், தலா, ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார், தந்தை, மகனை சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X