திறக்கப்படாத கழிப்பறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திறக்கப்படாத கழிப்பறை

Added : நவ 30, 2019

உத்திரமேரூர்: 'வேடபாளையத்தில் கட்டி முடித்து, திறக்கப்படாமல் உள்ள, சமுதாய கழிப்பறையை பயன்பாட்டிற்கு விடவேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூர் பேரூராட்சி, வேடபாளையம், பஜனை கோவில் தெருவில், 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், 2017 - 18ம் ஆண்டில், சமுதாய கழிப்பறை கட்டடம் புதிதாக கட்டப்பட்டது. கட்டி முடித்து ஓராண்டாகியும், பயன்பாட்டிற்கு வரவில்லை.இதனால், இப்பகுதி வாசிகள், இயற்கை உபாதைக்கு, அருகில் உள்ள முட்புதரில் தஞ்சமடைய வேண்டி உள்ளது. இரவில், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.எனவே, சமுதாய கழிப்பறை கட்டடத்தை திறக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X