பொது செய்தி

தமிழ்நாடு

'நிலுவை வரியை செலுத்துங்க!' ஜி.எஸ்.டி., முதன்மை கமிஷனர் அழைப்பு

Added : நவ 30, 2019
Advertisement
 'நிலுவை வரியை செலுத்துங்க!' ஜி.எஸ்.டி., முதன்மை கமிஷனர் அழைப்பு

திருப்பூர்;திருப்பூர் பகுதி வர்த்தகர்கள், நிலுவை வரித்தொகையை, உடனே செலுத்த வேண்டும் என, மத்திய ஜி.எஸ்.டி., முதன்மை கமிஷனர் ராஜேஷ் சோதி அறிவுறுத்தியுள்ளார்.மத்திய அரசு அறிவித்துள்ள 'சப்கா விஸ்வாஸ் 2019' திட்டம் குறித்த கருத்தரங்கம், திருப்பூர் - வாலிபாளையம் டைஸ் அண்டு கெமிக்கல் அரங்கில் நேற்று நடந்தது. வரி பயிற்சியாளர்கள் சங்க தலைவர் முத்துராமன் தலைமை வகித்தார். செயலாளர் மணிகண்டன் வரவேற்றார்.மத்திய ஜி.எஸ்.டி., கோவை முதன்மை கமிஷனர் ராஜேஷ் சோதி பேசியதாவது:வரி நிலுவைக்கு தீர்வுகாணும்வகையில், மத்திய அரசு, கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் சப்கா விஸ்வாஸ்- 2019 திட்டத்தை செயல்படுத்திவருகிறது; வரும் 31ம் தேதி வரை மட்டுமே இந்த திட்டம் தொடரும்.வர்த்தகர்கள், நிலுவையில் உள்ள கலால், சேவை வரிகளை உடனடியாக செலுத்தவேண்டும். நிலுவை வரிகளை செலுத்துவோருக்கு, வட்டி மற்றும் அபராத தொகையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வழக்கு மற்றம் தண்டனையிலிருந்தும் முழுமையாக விடுதலை அளிக்கப்படுகிறது.வரித்துறையால் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நிலுவையில் உள்ள அல்லது மேல்முறையீடு செய்துள்ள வர்த்தகர்களுக்கு, செலுத்த வேண்டிய வரித்தொகை, 50 லட்சத்துக்கு குறைவாக இருந்தால், அதில் 70 சதவீதம் தள்ளுபடி; 50 லட்சத்துக்கு மேல் செலுத்தப்படவேண்டிய வரிக்கு, 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.நிலுவைத் தொகை உறுதிப்படுத்தப்பட்டு, மேல் முறையீடு எதுவும் நிலுவையில் இல்லையென்றால், செலுத்த வேண்டிய வரித்தொகை 50 லட்சத்துக்கு குறைவாக இருப்பின், 60 சதவீதம்; 50 லட்சத்துக்கும் அதிகமான தொகைக்கு, 40 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.மத்திய ஜி.எஸ்.டி., திருப்பூர் துணை கமிஷனர் சித்தார்த் மற்றும் அதிகாரிகள், வரி பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X