மாமல்லபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், தாலுகா தலைநகரங்கள் மற்றும் முக்கிய பகுதிகளின் மழை பெய்த அளவு வெளியிடப்படுகிறது.
ஆனால், அணுசக்தி பகுதி கல்பாக்கம் மற்றும் அருகாமை பகுதி மழைப்பதிவு, பல ஆண்டுகளாக வெளியிடப்படுவது இல்லை.இப்பகுதியில், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ள நிலையில், இங்கு பதிவாகும் மழை அளவை அறிய இயலவில்லை. மாவட்டத்தில், பிற இடங்களைவிட, இங்கு அதிக மழையே பெய்தாலும், மழைப்பதிவை அறிய இயலாத சூழலில், பிற பகுதிகளின் மழைப்பதிவு அடிப்படையில் தான், அதிக மழையளவு குறிப்பிடப்படுகிறது.இது குறித்து, வருவாய் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:கல்பாக்கம் பகுதி, அணுசக்தித் துறையைச் சேர்ந்தது. அங்கு பதிவாகும், மழை அளவை, அவர்கள், எங்களிடம் தெரிவிப்பதில்லை. நாங்கள் கேட்டாலும் ஒத்துழைப்பது இல்லை. இதனால், அப்பகுதி மழைப்பதிவு அளவை, அறிவிக்க இயலவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.