கலெக்டர் ஆபீசில் தேன்கூடு: ஊழியர்கள் மத்தியில் அச்சம்

Added : நவ 30, 2019
Advertisement

திருப்பூர்:கலெக்டர் அலுவலக வளாகத்தின், ஆறாவது மாடியில், பெரிய தேன்கூடு இருப்பதால், அலுவலர்கள் நீங்காத பயத்துடன் நடமாடிக்கொண்டிருக்கின்றனர்.கலெக்டர் அலுவலக வளாகம், தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன் இயங்குகிறது. புதிய கட்டடத்தில், அவ்வப்போது தேனீக்கள் கூடு கட்டுகின்றன. பக்கவாட்டில் உருவாகும் தேன்கூடு, காற்றில் அசைவதால், அங்கிருந்து படையெடுக்கும் தேனீக்கள், வளாகத்தில் நடமாடும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்களை 'கொட்டி' வதைக்கின்றன.பொதுமக்கள் குறைகேட்பு கூட்ட நாளில், தேனீக்கள் படையெடுப்பால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வரலாறும் அரங்கேறியுள்ளது. தற்போது, கட்டடத்தின் வடமேற்கு 'பிளாக்'கில், ஆறாவது தளத்தில், 'மெகா' தேன் கூடு உருவாகியுள்ளது.கண்ணில் பார்த்தாலே, உடல் சிலிர்க்கும் அளவுக்கு, தேனீக்கள் மொய்த்து கொண்டிருக்கின்றன. இதனால், அங்குள்ள அரசு அலுவலகங்கள், ஜன்னல் கதவுகளை திறக்காமலேயே இயங்கிக்கொண்டிருக்கின்றன. அனைவரும், நீங்காத பயத்துடன், நடமாடிக்கொண்டிருக்கின்றனர்.பொதுமக்களுக்கும், அரசு அலுவலர்கள் பாதிக்கப்படும் முன்பாக, தீயணைப்புத்துறை உதவியுடன், தேன் கூட்டை அகற்ற அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X