பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் பருவ மழை பல்லடத்தில், 27 மி.மீ.,

Added : நவ 30, 2019
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், இடைவெளி விட்டிருந்த வடகிழக்கு பருவமழை, மீண்டும் தலைகாட்டியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மானாவாரி சாகுபடிக்கு, இத்தகைய மழைப்பொழிவு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்; தீவன பயிர் மட்டுமல்லாது, தானியமும் மகசூல் கிடைக்கும்.நேற்று முன்தினம் துவங்கி, நேற்று காலை வரை, மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்தது.பல்லடத்தில், 27 மி.மீ.,

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், இடைவெளி விட்டிருந்த வடகிழக்கு பருவமழை, மீண்டும் தலைகாட்டியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மானாவாரி சாகுபடிக்கு, இத்தகைய மழைப்பொழிவு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்; தீவன பயிர் மட்டுமல்லாது, தானியமும் மகசூல் கிடைக்கும்.நேற்று முன்தினம் துவங்கி, நேற்று காலை வரை, மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்தது.பல்லடத்தில், 27 மி.மீ., அளவுக்கு கனமழை பெய்துள்ளது. திருப்பூர் வடக்கில், 12 மி.மீ., - ஊத்துக்குளியில், 13 மி.மீ., - குண்டடத்தில், 20 மி.மீ., - காங்கயத்தில், 8 மி.மீ., - தாராபுரத்தில், 7 மி.மீ.,மூலனுாரில், 6 மி.மீ., அமராவதி அணை பகுதியில், 8 மி.மீ., உடுமலையில், 7 மி.மீ.,- மடத்துக்குளத்தில், 9 மி.மீ., மழை பெய்துள்ளது.மாவட்டத்தில் சராசரியாக, 10.11 மி.மீ., மழை பெய்துள்ளது. நேற்று அதிகாலை முதல், திருப்பூர், பல்லடம், அவிநாசி பகுதிகளில், லேசான துாறல் மழை பெய்து கொண்டிருந்தது. திருப்பூர் டி.எம்.எப்., பாலத்தில், மழைநீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X