பொது செய்தி

தமிழ்நாடு

தொழில்முனைவோருக்கு ரூ.4.16 கோடி கடனுதவி

Added : நவ 30, 2019
Advertisement

திருப்பூர்:'நீட்ஸ்' திட்டத்தில் தொழில்முனைவோர் நான்குபேருக்கு, 4.16 கோடி முதலீட்டு கடன் வழங்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட தொழில் மையம் சார்பில், சிறு, குறு நிறுவனங்களுக்கான திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நேற்று நடந்தது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் மானியம்; வங்கி கடனுதவி, புதிய தொழில்முனைவோர் மேற்கொள்ளவேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.'நீட்ஸ்' திட்டத்தில், நான்கு பேருக்கு, 4.16 கோடி ரூபாய் திட்ட முதலீட்டுக்கான வங்கி கடனுதவி; நீட்ஸ் மற்றும் பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிழை, கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்.மாவட்ட தொழில் மைய மேலாளர் கண்ணன், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், முன்னோடி வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி மற்றும் தொழில்முனைவோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X