சோகண்டி சாலை பணி ஒப்பந்ததாரர் மெத்தனம்

Added : நவ 30, 2019
Share
Advertisement
செங்கல்பட்டு: வீரகுப்பம் - சோகண்டி சாலை பணியை, ஒப்பந்ததாரர் குறித்த காலத்தில் முடிக்காமல் இழுத்தடிப்பதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள, மலாலிநத்தம் - வீரகுப்பம் சாலை, நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது.இவ்விரு ஊர்களுக்கு இடைப்பட்ட, அடவிளாகம், சோகண்டி, கூனம்பட்டரை உள்ளிட்ட கிராமத்தினர், இச்சாலை வழியாக தான்

செங்கல்பட்டு: வீரகுப்பம் - சோகண்டி சாலை பணியை, ஒப்பந்ததாரர் குறித்த காலத்தில் முடிக்காமல் இழுத்தடிப்பதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள, மலாலிநத்தம் - வீரகுப்பம் சாலை, நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது.இவ்விரு ஊர்களுக்கு இடைப்பட்ட, அடவிளாகம், சோகண்டி, கூனம்பட்டரை உள்ளிட்ட கிராமத்தினர், இச்சாலை வழியாக தான் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றத்திற்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில், சேதமடைந்த இந்த சாலையில், வீரகுப்பம்- - சோகண்டி வரை, 1.80 கி.மீ., தொலைவிற்கு சீரமைக்க, 40 லட்சம் ரூபாயை, நெடுஞ்சாலைத் துறை ஒதுக்கியது.இப்பணியை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர், மார்ச்சில் பணிகளை துவக்கினார். பின், அரைகுறை சாலையுடன் கிடப்பில் போட்டுள்ளார்.மாதக்கணக்காக இழுத்தடிப்பதால், இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள், இவ்வழியே நடந்து செல்ல அவதிப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X