பொது செய்தி

தமிழ்நாடு

'நிறைவான வாழ்க்கை எது?' இதய நிறைவு நிறுவன தலைவர் கூறும் சூத்திரம்

Added : நவ 30, 2019
Advertisement

பொங்கலுார்:நிறைவான வாழ்க்கை எது?' என்பது குறித்து, இதய நிறைவு நிறுவன தலைவர் விளக்கினார்.பொங்கலுார் அருகே பல்லவராயன் பாளையத்தில் உள்ள டி.ஜே., பார்க்கில் நடந்த, கூட்டு தியான நிகழ்ச்சியில் பங்கேற்ற, இதய நிறைவு நிறுவன தலைவர் ஸ்ரீகம்லேஷ்தேசாய் பட்டேல், பேசியதாவது:ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தெய்வீக சக்தி உள்ளடங்கி உள்ளது. அதை விழிப்படைய வைத்து அதனுடன் ஒன்றி வாழும் திறனை பெற வேண்டும்.
இது மனித வாழ்வின் லட்சியம். இந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆன்மாவும் பிறப்பெடுத்துள்ளது.இதை மறந்துவிட்டு பிற அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழல் நிலவுகிறது. ஒவ்வொரு மனிதரும் தன் லட்சியத்தை அடைய முழு கவனம் செலுத்த வேண்டும். சிறப்பான ஆன்மிக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தேவையான பொருளாதார வாழ்வு அவசியம்.ஆனால், ஆன்மிக வாழ்க்கையை உதாசீனப்படுத்திவிட்டு உலக வாழ்க்கைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படுமானால், அது ஒரு நிறைவான வாழ்க்கையாக இருக்காது. இதை இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.இன்றைய சூழல் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. இதை சீர்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. இதில் தாய்மார்களின் பங்கு முக்கியமானது. குழந்தை தாயின் கருவில் இருக்கும்போதே கற்றுக்கொள்ள துவங்குகிறது.
கருவுற்ற தாயின் எண்ண ஓட்டத்தில் குழந்தையின் குணாதிசயம் அமைகிறது.எதிர்மறையான எண்ணங்களை கொண்டுள்ள தாயின் கருவறையில் வளரும் குழந்தையின் மனப்பாங்கை நேர்மறையாக மாற்றுவது எளிதானதல்ல. அடுத்த தலைமுறையின் எதிர்காலம் நம் கையில் உள்ளது. இதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.இவ்வாறு, ஸ்ரீகம்லேஷ் தேசாய் பட்டேல் பேசினார்.இதில் இதய நிறைவு நிறுவன பயிற்சியாளர்கள், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X