உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருமா?

Updated : நவ 30, 2019 | Added : நவ 30, 2019 | கருத்துகள் (2)
Advertisement
உள்ளாட்சி தேர்தல், வழக்கு நாளை மறுநாள் விசாரணை

புதுடில்லி :'வார்டு மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது' என, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்குமாறு, தலைமை நீதிபதி அமர்வில், தி.மு.க., சார்பில், கோரிக்கைவைக்கப்பட்டது. இதையடுத்து, இவ்வழக்கு, நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பணியில், மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சிகளும், தேர்தலை சந்திக்க தயாராகிவருகின்றன. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தி.மு.க., சார்பில், உச்சநீதிமன்றத்தில், நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது.




கோரிக்கைஅதன் விபரம்:உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன், வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய, தமிழகதேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இந்தப் பணிகளை நிறைவு செய்யாமல், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது. ஏற்கனவே, வார்டு மறுவரையறை தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இன்னும் இறுதி தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், தேர்தல் நடத்த அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.'இந்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், தி.மு.க., சார்பில், நேற்று கோரிக்கை வைக்கப்பட்டது.மனு தாக்கல்இதற்கிடையே, தமிழ கத்தில் புதிதாக உதயமான ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு பேர்,உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், நேற்று புதிதாக மனு தாக்கல் செய்தனர்.இவற்றை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை உரிய நாளில் பட்டியலிடுமாறு, பதிவாளருக்கு உத்தரவிட்டது.இதையடுத்து, இம்மனு, நாளை மறு நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என,எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
30-நவ-201921:50:30 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN அரசியல் கட்சிகளுக்கு கோர்ட் முன்னுரிமை அளித்தல் நல்லதல்ல . நாட்டின் நலனை காக்கனும் கொலைக்காரன்களை அழிக்க அதிக அக்கரை எடுத்து காப தூக்கிலிடனும். தினம் குற்ற செயல்களையே ஊடகங்களில் காட்டுகின்றனர்.இதை குறைக்க கோர்ட் பாடுபட்டால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
30-நவ-201909:31:56 IST Report Abuse
செய்யாறு மு. கருணாகரன் உள்ளாட்சி நிர்வாகத்தை சரியாக நடத்தி செல்ல பிரதிநிதிகளே இல்லாமல் பல அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளமுடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்தை மேற்கொண்டுள்ளனர் சாலைசீர் செய்தல்,,குடிநீர் விநியோகம்,சாலை விளக்கு கழிவு நீர் கால்வாய்கள் போன்ற எந்த திட்டங்களும் சரியானமுறையில் செயல்படவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான் . உள்ளாட்சி தேர்தலை உரிய நேரத்தில் நடத்தவிடாமல் அரசியல் வாதிகள் தங்களின் சுயநலத்திற்க்காக செயல்படுகிறார்கள் கிராமராஜ்யம் என்பது மக்களின் குரலை பிரதிபலிக்கும் ஒரு சக்தியாகும் ஆகவே எந்தவித தங்கு தடையுமின்றி உரிய நேரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்திமுடிக்க அனைவரும் கருணை உள்ளதோடு செயல் படவேண்டுமென்பதே எனது பணிவான கருத்தாகும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X