பொது செய்தி

தமிழ்நாடு

லாரியை மடக்கிய தாசில்தார் விடுவித்த நெடுஞ்சாலை துறையினர்

Added : நவ 30, 2019
Advertisement

அவிநாசி:மண் எடுத்து சென்ற விவகாரத்தில், வருவாய் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் மத்தியில் முரண்பாடு ஏற்பட்டு, இரு தரப்பு பேச்சுக்கு பின் சமரசம் ஏற்பட்டது.அவிநாசி அருகே வஞ்சி பாளையம் ரோட்டோரமுள்ள மண்ணை அள்ளியபடி, டிப்பர் லாரி, நேற்று மாலை, தெக்கலுார் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை, தாசில்தார் சாந்தி நிறுத்துமாறு கூறினார். டிரைவர், லாரியில் இருந்த மண்ணை ரோட்டிலேயே கொட்ட முயற்சித்தார்.டிரைவரிடம் மண் அள்ளி செல்வதற்கான ஆவணம் இல்லாததால், தாலுகா அலுவலகத்தில் கொண்டு வந்து, லாரியை நிறுத்தும்படி கூறினார். தாசில்தார் அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்தனர்.விசாரணையில், 'விதிமுறை மீறி மண் எடுக்கப்படுவதாக எங்களுக்கு புகார் வந்தது. அதனால், தடுத்து நிறுத்தினோம்,' என, தாசில்தார் கூறினார்.நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகர், 'தெக்கலுார் - வஞ்சிபாளையம் ரோட்டில், சிறு பாலம் கட்ட, மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால், சகதி ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். அதற்காக, குடிநீர் வடிகால் வாரியத்தினரால் குழாய் பதிக்கப்பட்டு, எஞ்சியிருந்த மண்ணை, அனுமதி பெற்ற பின்னரே, லாரியில் எடுத்து சென்றோம்,' என்று விளக்கமளித்தார்.இதனால், மண் கொண்டு சென்ற பிரச்னை முடிவுக்கு வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X