பொது செய்தி

தமிழ்நாடு

100 நாள் திட்டம் நிறுத்தப்படுகிறதா! திருவங்கரணை கிராமத்தினர் கேள்வி

Added : நவ 30, 2019
Advertisement
 100 நாள் திட்டம் நிறுத்தப்படுகிறதா!  திருவங்கரணை கிராமத்தினர் கேள்வி

திருவங்கரணை: நுாறு நாள் திட்டம் நிறுத்தப்படுகிறதா என, சமூக தணிக்கை கூட்டத்தில், திருவங்கரணை கிராம பெண்கள் கேள்வி எழுப்பினர்.

வாலாஜாபாத் ஒன்றியம், திருவங்கரணை ஊராட்சியில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட, சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம், நேற்று நடந்தது.தற்காலிக ஊராட்சி தலைவர் எட்டி தலைமை வகித்தார். வட்டார சமூக தணிக்கை அலுவலர் சங்கர் பங்கேற்றார்.கூட்டத்தில், 100 நாள் திட்டம் தொடர்பாக, புகார் அளிக்க விரும்பினால் தெரிவிக்கலாம் என, அவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து நடந்த விவாதம்.கிராமவாசி: 100 நாள் வேலை, 150 நாளாக உயர்த்தி தர வேண்டும்.சமூக தணிக்கையாளர்: இது மத்திய அரசு திட்டம். உங்களின் கோரிக்கையை, மனுவாக தாருங்கள்; அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.கிராமவாசி: ஏற்கனவே, வேலை செய்தவர்களுக்கு, எட்டு வாரம் கூலி கிடைக்கவில்லை; வேலையும் இல்லை. பணம் எப்போது வரும்?சமூக தணிக்கையாளர்: நீங்கள் வேலை செய்த வேலைக்கு, கண்டிப்பாக உங்களின் வங்கி கணக்கிற்கு கூலி கிடைக்கும்; கவலைப்பட வேண்டாம்.கிராமவாசி: 100 நாள் வேலை நிறுத்தப்படுவதாக பேசப்படுகிறதே உண்மையா?சமூக தணிக்கையாளர்: இத்திட்டத்தில், ஏரி குளம் துார் வாரிய பின், அங்கன்வாடி மையம், ஊராட்சி கட்டடங்களை கட்டப்பட்டு வருகின்றன. இது போன்ற ஆக்கப்பூர்வமாக பணிகள் நடக்கும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X