பொது செய்தி

தமிழ்நாடு

கனவு நனவாகும் இடம் சென்னை! பெங்களூரு பெண்

Added : நவ 30, 2019
Share
Advertisement
''மற்ற இடங்களை காட்டிலும், சென்னை தான், கனவை நனவாக்கும் இடம். அனைத்து விதமான அனுபவமும், சென்னையில் கிடைக்கும், அதை நாம் தான், தகுந்தபடி பயன்படுத்த வேண்டும்,'' என்கிறார், பிரபல, 'பேஷன் டிசைனர்' பைசா அமன் கான். அவருடன் பேசியதிலிருந்து...சென்னையில் உங்கள் அனுபவம் எப்படி?சொந்த ஊர் பெங்களூரு. என் கனவு, 'பேஷன் டிசைனர்' ஆவது. தந்தையின் வற்புறுத்தலால், ஆசிரியர் பயிற்சி
 கனவு நனவாகும்  இடம் சென்னை!  பெங்களூரு பெண்

''மற்ற இடங்களை காட்டிலும், சென்னை தான், கனவை நனவாக்கும் இடம். அனைத்து விதமான அனுபவமும், சென்னையில் கிடைக்கும், அதை நாம் தான், தகுந்தபடி பயன்படுத்த வேண்டும்,'' என்கிறார், பிரபல, 'பேஷன் டிசைனர்' பைசா அமன் கான்.

அவருடன் பேசியதிலிருந்து...சென்னையில் உங்கள் அனுபவம் எப்படி?சொந்த ஊர் பெங்களூரு. என் கனவு, 'பேஷன் டிசைனர்' ஆவது. தந்தையின் வற்புறுத்தலால், ஆசிரியர் பயிற்சி முடிக்க சென்னை வந்தேன். பெரியமேடில், நான் தங்கிய வீட்டில், மழை பெய்தால் தண்ணீர் ஒழுகும். குளியலறைக்கு கதவு கிடையாது. துணியை திரையாக மறைத்து தான் குளிக்க வேண்டும். ஆனாலும், சிரமத்தை பொறுத்துக் கொண்டேன். ஒரு நாள், என் பெற்றோர் இதை கேள்விப்பட்டு இங்கு வந்து, என்னை வாணியம்பாடி அழைத்துச் சென்றனர். 'சென்னையை விட, பெங்க ளூரில் நிறைய வேலை இருக்கிறது; வா போகலாம்' என்றனர். ஆனால், நான் கேட்கவில்லை. சென்னையில் தான், பாரபட்சம் பார்க்காமல், யார் வேண்டுமானாலும் மற்றவருக்கு உதவுவதை பார்க்கிறேன். பெங்களூரில் அப்படி கிடையாது.முதல் வேலை, முதல் சம்பளம் எப்படி கிடைத்தது?தி.நகரில், புத்தகம் விற்பனை செய்யும் வேலை கிடைத்த மகிழ்ச்சியில், அடம் பிடித்து சென்னை வந்தேன். யாரையும் தெரியாத நிலையில், ஒரு பெட்டிக்கடையில் என் உடைமைகளை வைத்து, வேலைக்கு போய் பார்த்தால், அங்கே நடைபாதையில், புத்தகம் விற்க சொன்னார்கள். ஒரு புத்தகம் விற்றால், 25 ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்றனர். என்னுடன், எம்.பி.ஏ., படித்த பெண் ஒருவரும், புத்தகம் விற்றார். அவரது அறையில் தான், நானும் தங்கினேன். இதைத் தொடர்ந்து, கால்சென்டரில் வேலை கிடைத்து, ஓரளவு நல்ல சம்பளம் கிடைத்தது.'மாடலிங்' துறையில் நுழைந்தது எப்படி?திருமணம் முடித்ததும், கணவரோடு சினிமா மற்றும் விளம்பர படப்பிடிப்பில் பணியாற்றினேன். சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில், கலை நிகழ்ச்சி நடத்தும் வேலையை, நானே செய்ய ஆரம்பித்தேன். ஒரு சமயம், குட்டீஸ்களுக்கான, 'பேஷன் ஷோ' தொடர்பான விளம்பரத்தை பார்த்தேன். என் மகளை, அதில் பங்கேற்க வைத்து, அவளுக்கு நானே, பேஷன் டிசைனராக இருந்தேன். அதன் வாயிலாக, பேஷன் டிசைனர் தொழில் செய்ய பல வாய்ப்புகள் வந்தன. சென்னை பேஷன் ஷோ நிகழ்ச்சியையும் நடத்தினேன்.யானையுடன் நடிகையை வைத்து, 'காலண்டர் ஷூட்' நடத்தியுள்ளீர்களே...ஆமாம். ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என நினைத்தேன். காட்டில் யானையை வைத்து, தத்ரூபமாக காலண்டர் ஷூட் நடத்த திட்டமிட்டேன். இதற்காக, பல மாத காத்திருப்புக்கு பின், கேரளாவில், யானையின் கால்ஷீட் மற்றும் விலங்குகள் நல அமைப்பின் அனுமதி கிடைத்தது. நடிகை சாக் ஷி அகர்வாலை வைத்து, போட்டோ ஷூட் நடத்தினேன். ஒவ்வொரு மாதத்தின் சிறப்பையும் வெளிப்படுத்தும் வகையில், யானையுடன் சாக் ஷி அகர்வாலின் போட்டோ ஷூட் அமைந்தது. எதிர்கால திட்டம்?என் பெற்றோர், 'கர்நாடகா தான் பெஸ்ட்' என்றனர். கர்நாடகாவை விட, தென்னிந்தியா தான் பெஸ்ட் என்பதை, என் வளர்ச்சி வாயிலாக, பெற்றோருக்கு காட்ட நினைத்தேன். மற்ற இடங்களை காட்டிலும், சென்னை தான், கனவை நனவாக்கும் இடம். அனைத்து விதமான அனுபவமும், சென்னையில் கிடைக்கும். அதை நாம் தான், தகுந்தபடி பயன்படுத்த வேண்டும்.திருமணத்திற்கு பின், பெண்கள் வீட்டில் முடங்குவதை பற்றி உங்கள் கருத்து?திருமணத்திற்கு பின், நான் சுதந்திரமாக செயல்படுவதை பார்த்து, பலர் என்னை திட்டினர். குடும்ப பெண்கள் மாடலிங்கில் ஈடுபடலாமா என, கேள்வி எழுப்பினர். ஆனால், என் பெற்றோரும், கணவரும், எனக்கு ஆதரவாக இருந்தனர். பெண்கள் எவ்வளவு படித்திருந்தாலும், திருமணம் ஆனதும் அவளை, வீட்டிலேயே முடக்கி, கணவருக்கும், குழந்தைக்கும் சேவை செய்யும் நபராக மாற்றி விடுகின்றனர். அனைவருக்கும் ஒரு திறமை இருக்கிறது. அது அவர்களுக்கு மட்டுமல்ல, இந்த சமூகத்திற்கும் பயன்பட வேண்டும்.சென்னை மாடலிங்கிற்கும், மற்ற மாநில மாடலிங்கிற்கும் உள்ள வித்தியாசம்?இங்கு ஒரு உதவி என்றால், போட்டியாளராக இருந்தாலும், ஒருவருக்கொருவர் உதவி செய்வர். இதை மற்ற மாநிலங்களில் எதிர்பார்க்க முடியாது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X