சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'ஜெயிப்போம்ன்னு சொல்ல தைரியமில்லியே!'

Added : நவ 30, 2019
Advertisement
 'ஜெயிப்போம்ன்னு சொல்ல தைரியமில்லியே!'

'ஜெயிப்போம்ன்னு சொல்ல தைரியமில்லியே!'

இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன், ஈரோடு வந்தார். அப்போது நிருபர்களிடம் அவர், 'தமிழகத்தில், தோல்வி பயம் உட்பட, பல்வேறு காரணத்தால், உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தடுக்க, பல்வேறு சூழ்ச்சிகளை, மாநில தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. எப்போதோ கூட்டியிருக்க வேண்டிய அனைத்து கட்சி கூட்டத்தை, மாநில தேர்தல் அதிகாரி, தற்போது தான் கூட்டி உள்ளார்; இது, சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.'மாவட்டம் பிரிப்பு, வார்டு வரையறையில் குளறுபடி, தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் என, அறிவித்துள்ளனர். இதை எதிர்த்து, யாராவது நீதிமன்றம் செல்ல வழி செய்கின்றனர். 'எப்போதும், பொங்கலுக்கு நான்கைந்து நாட்களுக்கு முன் வழங்கப்படும், பொங்கல் பரிசும், ரொக்கத்தொகையும், 48 நாட்களுக்கு முன்பே அறிவித்து, வழங்க இருப்பது, உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவது போல தெரிகிறது...' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'இதையெல்லாம் மீறி, தேர்தல்ல ஜெயிச்சு சாதிப்போம்ன்னு சொல்ல தைரியமில்லியே இவருக்கு...' எனக் கூற, மற்ற நிருபர்கள் ஆமோதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X