சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

'ரவுண்டு' கட்டும் தலைவர்கள்!

Added : நவ 30, 2019
Advertisement
 'ரவுண்டு' கட்டும் தலைவர்கள்!

'ரவுண்டு' கட்டும் தலைவர்கள்!

மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வுக்கு ஏற்பட்ட பின்னடைவால், அந்த மாநிலத்தில் இதுவரை, 'அடக்கி' வாசித்து வந்த, அந்த கட்சியின் மூத்த தலைவர்கள், இப்போது வெளிப்படையாக அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.கடந்த முறை, தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான ஆட்சியில், பா.ஜ., மூத்த தலைவர்களான ஏக்நாத் கட்சே, பிரகாஷ் மேத்தா, சந்திரசேகர் பவன் குலே, வினோத் தாவ்டே போன்றோர், அமைச்சர்களாக இருந்தனர்.இளைஞரான பட்னவிசுக்கு, சற்று வயது முதிர்ந்த மூத்த தலைவர்களுடன் அனுசரித்து போக முடியவில்லை. இதனால், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், இவர்களுக்கு, 'சீட்' கொடுக்கப்படவில்லை.பிரசாரத்திலும், தேர்தல் வேலைகளிலும் ஆர்வம் காட்டாமல், அவர்கள் ஒதுங்கியிருந்தனர். தற்போது மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக, பா.ஜ.,வால், மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாமல் போய் விட்டது.இதுவரை அமைதியாக இருந்த ஏக்நாத் கட்சே உள்ளிட்ட மூத்த தலைவர்கள், இப்போது போர்க்கொடி துாக்கியுள்ளனர்.'அரசியல் அனுபவம் இல்லாத தேவேந்திர பட்னவிஸ் பேச்சை நம்பி, மூத்த தலைவர்களை, கட்சி மேலிடம் ஒதுக்கி வைத்து விட்டது. எங்களுக்கு வாய்ப்பு அளித்திருந்தால், கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம்; ஆட்சியும் கைவிட்டு போயிருக்காது' என, ஆத்திரத்துடன் கூறுகிறார், ஏக்நாத் கட்சே.தேவேந்திர பட்னவிசோ, 'இன்னும் எத்தனை பேர், இன்னும், 'ரவுண்டு' கட்டி அடிக்க காத்திருக்கின்றனரோ தெரியவில்லையே...' என, புலம்புகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X