சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : நவ 30, 2019
Share
Advertisement
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: இலங்கையில், 1.37 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என, ஐ.நா., சபை தெரிவித்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், இங்கு வந்த, அப்போதைய இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவை எதிர்த்தும் போராடினோம். இப்போது, அவரின் தம்பியும், இப்போதைய அதிபருமான கோத்தபயா வருகையை எதிர்த்தும் போராடிக் கொண்டிருக்கிறோம்.'டவுட்' தனபாலு: அடுத்த நாட்டு விவகாரத்தில் நீங்க
 'டவுட்' தனபாலு

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: இலங்கையில், 1.37 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என, ஐ.நா., சபை தெரிவித்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், இங்கு வந்த, அப்போதைய இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவை எதிர்த்தும் போராடினோம். இப்போது, அவரின் தம்பியும், இப்போதைய அதிபருமான கோத்தபயா வருகையை எதிர்த்தும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

'டவுட்' தனபாலு: அடுத்த நாட்டு விவகாரத்தில் நீங்க என்ன தான், போராட்டம் நடத்தினாலும், வாய் கிழிய கத்தினாலும் எதுவும் நடக்காது; எதையும் மாற்ற முடியாது என்பது, இதன் மூலம், 'டவுட்' இல்லாமல் உங்களுக்கு புரிந்திருக்குமே!


தி.மு.க., சட்டத்துறை செயலர் கிரிராஜன்: உள்ளாட்சி தேர்தலில், பஞ்., தலைவர் துவங்கி, மேயர் பதவி வரை, எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளோம். இட ஒதுக்கீடு விவகாரத்தையும், முறையாக பின்பற்றவில்லை. இவற்றை செய்த பிறகு, தேர்தலை நடத்துங்கள் என, வலியுறுத்தினோம்.
'டவுட்' தனபாலு: உள்ளாட்சி தேர்தல் நடப்பதில், தி.மு.க.,வுக்கு விருப்பம் இல்லை என்பது தான், துவக்கத்தில் இருந்தே தெரிகிறதே... அதனால், என்னவெல்லாம் முட்டுக்கட்டை போட முடியுமோ அதை எல்லாம் போடத் தான் செய்யும் என்பது, 'டவுட்' இல்லாமல் புரிகிறது. கடைசியில், அனைவரும் எதிர்பார்த்தது போல, சுப்ரீம் கோர்ட்டுக்கும், தி.மு.க., சென்று விட்டது. இதிலிருந்தே, உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில், அக்கட்சிக்கு விருப்பம் இல்லை என்பதில், 'டவுட்'டே இல்லை!



இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: மத்தியில், பா.ஜ., ஆட்சியிலிருந்த போது, தி.மு.க., கூட்டணி வைத்திருந்தது. அப்போது, பா.ஜ.,வை, சிறந்த அரசு என, தி.மு.க., பாராட்டியது. இப்போது, பா.ஜ.,வுடன், அ.தி.மு.க., கூட்டணியில் உள்ளது. இதை பொறுக்க முடியாத, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எங்களைப் பார்த்து, அடிமை அரசு என கூறுகிறார். இது, என்ன நியாயம்?

'டவுட்' தனபாலு: தி.மு.க., சொல்வது நியாயமே இல்லை தான். 'மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி, அதிகாரத்தில் இல்லாததால், வாய்க்கு வந்தபடி, அக்கட்சியினர் பேசுகின்றனர்' என, நீங்களே பல முறை கூறியுள்ளீர்கள். தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை, மக்களிடம் அழுத்தம் திருத்தமாக பதிய வைக்க, இன்னும் ஆணித்தரமாக கருத்துக்களைக் கூறினால் சரியாக இருக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X