சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

கயிறு கட்டி வந்தால் பலன் கிடைச்சுடுமா!

Added : நவ 30, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

கயிறு கட்டி வந்தால் பலன் கிடைச்சுடுமா!

எஸ்.ஏ.சவரியார், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்: திண்டுக்கல் மாவட்டம், பழநி மலையை சுற்றி, எத்தனை, 'டாஸ்மாக்' கடைகள் அமைக்கப்பட்டு, பல வழிகளில் வருமானம் ஈட்டி வருகின்றன என்பதை, அறுபடை முருகக் கடவுளின் பார்வைக்கு தான் விட வேண்டும்.படிப்படியாக, முழுமையான, மதுவிலக்கு அமல்படுத்துவது, தமிழக அரசின் கனவாக, குறிக்கோளாக இருக்கட்டும். அதற்கு முன், 'டாஸ்மாக்' பிடியிலுள்ள ஆன்மிக தலங்களையும், அதன் பக்தர்களையும், முதலில் மீட்க வழிவகுப்பதே, உண்மையான ஆன்மிக அரசியல்.'ராமேஸ்வரம், ராமநாதசுவாமி குடிகொண்டிருக்கும் தீவில், 'டாஸ்மாக்' கடைகள் இருக்கக் கூடாது' என, ராமமூர்த்தி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். ஆனால், தமிழக அரசின் கடமை உணர்ச்சியானது, அங்கு, 'டாஸ்மாக்' கடைகள் அமைப்பதே, குறிக்கோளாக்கி செயலாற்றி வருவதாக தெரிகிறது.அய்யப்ப பக்தர்களால், கார்த்திகை மாத விற்பனை, 'டாஸ்மாக்' கடைகளில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மனதில் ஏற்படுத்திய, தற்காலிக மதுவிலக்கு கொள்கை பற்றே, முதற்காரணம்; இதை ஆட்சியாளர்கள் அறிய வேண்டும்.செப்டம்பர் முதல் வாரத்தில், பிரமாண்டமாய் கூடும், நாகப்பட்டினத்தில் உள்ள வேளாங்கண்ணி திருத்தல பக்தர்கள் கூட்டத்தின், ஐந்தில் ஒரு பகுதியானோர், மலிவு விலை மது விற்பனை கூடமான, காரைக்காலில் முகாமிடுகின்றனர்; அங்கு கும்மாளம் அடிப்பது, ஆண்டு தோறும் நடக்கும் சம்பிரதாயங்களாக மாறி விட்டது.ஆன்மிக பக்தர்களை சிறை பிடிக்கும், 'டாஸ்மாக்' கடைகளை, முதலில் அகற்றி, மதுவிலக்கு கொள்கைக்கு, பிள்ளையார் சுழி போட வேண்டும். பக்தர்களை, 'குடி'யின் பிடியில் இருந்து விடுபட, அரசாணை இயற்றுங்கள்.முதல்வர் இ.பி.எஸ்.,சும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,சும், நெற்றியில் வானவில் போன்று, பல வண்ணங்களில், திருநீர், மஞ்சள், குங்குமமிட்டு, கை நிறைய ஆன்மிக கயிறு கட்டி வலம் வந்து, என்ன பலன் தந்து விட போகிறது!


ராமநாதபுரத்திற்குவிமான சர்வீஸ்அவசிய தேவை!

ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், தலைவர், மாவட்ட தொழில் வர்த்தக சங்கம், ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: மத்திய அரசின், 'உதய்' திட்டத்தில், மாவட்ட தலைநகரங்களை இணைக்கும், உள்நாட்டு விமான சேவையை, விமான போக்குவரத்து துறை திட்டமிட்டு பல காலமாகிறது.குறிப்பாக, ராமநாதபுரம் மற்றும் ஓசூருக்கு, இதில் தனிப்பட்ட முக்கியம் கொடுக்கப்பட்டுள்ளது; இதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவில் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் தரிசனத்துக்கு, வடமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் வருகின்றனர். ராமநாதபுரத்தில் விமான போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டால், மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும்; இதில், எள்ளளவும் ஐயமில்லை.ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர், வளைகுடா நாடுகளிலும், சிங்கப்பூர், மலேசியா, புரூணை போன்ற நாடுகளிலும், தொழில் முனைவோர்களாகவும், தொழிலாளர்களாகவும், மேலாண்மை பொறுப்புகளிலும், பணியாற்றுகின்றனர்.விமான பயணத்துக்காக, திருச்சி அல்லது மதுரை செல்ல வேண்டிய கட்டாய நிலைக்கு, இவர்கள் ஆளாகி வருகின்றனர். ராமநாதபுரத்தில் விமான நிலையத்தை அமைக்க, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்த விமான நிலையத்துக்கு, மறைந்த மண்ணின் மைந்தர், முன்னாள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன் நினைவாக, 'அப்துல் கலாம் விமான நிலையம்' என, பெயரிட்டால், அது மிகப் பொருத்தமாக அமையும்!


சினிமா காரர்கள்காலடியில்தமிழக அரசியலா!
வி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: நடிகர் என்ற அந்தஸ்தை தாண்டி, மனிதாபிமானம், வள்ளல், மக்கள் மீது உண்மையான பாசம், அரசியல் களத்தில், எம்.ஜி.ஆர்., நீண்ட கால அனுபவம் பெற்றவர். 'மக்கள் தலைவர்' என்ற பெயர், எம்.ஜி.ஆருக்கு, சும்மா வந்து விடவில்லை.தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின், பழி வாங்கும் ராஜதந்திரத்திற்கு அப்பால், எம்.ஜி.ஆரை முதல்வராக்கினர், மக்கள்!சினிமாவால் அரசியலுக்கு வந்தாலும், எம்.ஜி.ஆரை போன்ற தலைவர்கள் கிடைப்பரா என, மக்கள் ஏங்கி கொண்டுள்ளனர்.இத்தருணத்தில், சினிமா இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், 'தமிழக தண்ணீரை குடித்தோர், எல்லாம் தமிழர்கள். இதுவரை ஆண்டவர்கள், அரசியலில் நுழையும் புதியவர்களுக்கு வழி விட வேண்டும். அந்த புதியவர்கள், 'போதும்' என நினைக்கும்போது, தம்பிமார்கள் ஆள வழி விட்டு செல்லுங்கள்' என, பேசியுள்ளார்.நமக்குள் எழும் கேள்விகள்; இதுவரை ஆண்டவர்கள் யாராவது புதியவர்களுக்கு வழி விட்டிருக்கின்றனரா... அந்த எண்ணம் தான் யாருக்காவது வந்து விடுமா அல்லது தம்பிமார்களுக்கு, யார் வழி விட்டிருக்கின்றனர் என்பது தான்.முதல்வர் பதவி, என்ன ஏலத்தில் வரக் கூடியதா அல்லது இசும்பு பாத்தியமா... எனக்கு அடுத்து, 'சினிமாக்காரன் நீ வா' என்று சொல்வதா...மக்களாக பார்த்து, கட்சியையும், முதல்வர் பதவியையும், ஓட்டின் வாயிலாக தேர்ந்தெடுப்பது தானே, முறையாக நடந்து கொண்டிருக்கிறது.இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் சொல்வதை பார்த்தால், '2021ல் ரஜினியோ, கமலோ அல்லது இருவரோ முதல்வர் பதவிக்கு வந்து விடுவர். அடுத்து, 2026ல், இன்னொரு சினிமா தளபதி, விஜய்க்கு ஆட்சியை கொடுத்து முதல்வராக்க வேண்டும்' என, சட்டத் திருத்தம் கூட செய்து விடுவரோ?இந்த எண்ணம் சினிமாக்காரர்களுக்கு வரக் காரணம், அரசியல் கட்சிகள், தங்கள் விளம்பரத்திற்காக, கட்சியில் சேர்ந்த அன்றே, செயலர், உயர்மட்டக் குழு என, பதவிகளை வாரி வழங்குவது தான்.என்ன அநியாயம்... தமிழக அரசியல், என்ன சினிமாக்காரர்களின் காலடியில் கிடக்கிறதா அல்லது தமிழக மக்கள் என்ன அவ்வளவு, அடி முட்டாள்களா?தமிழகத்தின் தலை எழுத்தை பார்க்கும்போது, இனி, அறிஞர்களும், சிறந்த நிர்வாகிகள், தமிழகத்தை ஆள முடியாது என்றே, தோன்றுகிறது!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
01-டிச-201910:01:11 IST Report Abuse
venkat Iyer எஸ்.ஏ. சவரியார் கூறியது உண்மையான செய்தியாகும். நண்பர் கூறுவது போல சபரிமலை கோவிலுக்கு சென்றவர்கள் பலர் சுற்றுலாவுக்கு போவது போலத்தான் செல்கின்றார்கள். பலர் வீடு வருவதற்குள் மதுவை அருந்திவிட்டு வருகிறார்கள். ஆதற்கு காரைக்கால் மதுக்கடைகளுக்கு அருகில் நிற்கும் அய்யப்ப பக்தர்களின் வாகனமே சாட்சியாகும். கோவில் போனால் அதனுடைய புண்ணியத்தை வீடு வந்து சேர்க்க வேண்டும். துக்கத்துக்கு போய்விட்டு வந்தால் அவற்றினை ஆற்றிலோ அல்லது குளத்திலோ மூழ்கி கரைத்து விட்டு விட வேண்டும் என்பது ஒரு வழிமுறை. சுவாமி மலைக்கு செல்லும் பக்தர்கள் பலருக்கு குருமாராக ஒருவர் இருப்பார். அவர் இவர்களுக்கு மதுபாருக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும். எல்லாம் வேடிக்கையாகிவிட்டது. அந்த கடவுள்தான் நல்லவற்றை உணர்த்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
30-நவ-201913:03:33 IST Report Abuse
s.rajagopalan பேராசியின் மறு பெயர் எஸ் ஏ சந்திரசேகர் கையில் பணம் துள்ளுது ...நாக்கும் தெறிக்குது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X