சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை -

Added : நவ 30, 2019
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை -

'உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து வலியுறுத்துவதால், வெங்காய விலை பிரச்னையால், மத்திய அரசுக்கும், கண்ணீர் வந்து விட்டது...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேச்சு: சமையலுக்கு மிகவும் அத்தியாவசியமான வெங்காயம் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன் இருந்ததை விட, நான்கு மடங்கு விலை அதிகரித்துள்ளது. வெங்காய விலையை கட்டுப்படுத்த, மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்.


'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பது, இதனால் தானோ...' என, கூறத் தோன்றும் வகையில், வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் அறிக்கை: பழம்பெரும் நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன், வசதியாக இருந்த போது, ஒவ்வோர் ஆண்டும் குற்றாலம் செல்வார். அப்போது, பாட்டி ஒருவருக்கு, 500 ரூபாய் வரை இனாமாக கொடுப்பார். வசதி, வாய்ப்புகள் குறைந்த பிறகும், வழக்கம் போல குற்றாலம் சென்றார்; அப்போதும் அந்த பாட்டியைச் சந்தித்தார். பணத்தை தேடிய போது, பணம் இல்லை. அதை அறிந்து அவர் கண்ணீர் விட்டார்; பாட்டி ஆறுதல் கூறினார்.


'அசுர வேகத்தில் வளர்ந்து உள்ள ஆன்லைன் வர்த்தகத்திலும், அதே அளவுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகி விட்டனவே...' என, கூறத் தோன்றும் வகையில், கன்னியாகுமரி காங்., - எம்.பி., வசந்தகுமார் பேச்சு: நாடு முழுவதும், நான்கரை கோடி வணிகர்களை பாதிக்கும், ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். ஆன்லைன் வர்த்தகம் தொடர்ந்தால், ஒரு கோடி பேர் வேலையின்றி தவிப்பர்.



'எத்தனை காலம் தான், பேச அழைப்பாங்கன்னு காத்திருப்பது என்ற கவலையில் விடுத்த அறிக்கையா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தொ.மு.ச., பேரவை பொதுச் செயலர் சண்முகம் அறிக்கை: மத்திய தொழிற்சங்கங்களின், 12 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக, மத்திய அரசு பேச தயாராகவில்லை. பேச்சுக்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, 2015க்கு பிறகு, தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசவே இல்லை. எனவே, உடனடியாக பேச வேண்டும்

.'போராட்டத்திற்கு ஒரு காரணம் கிடைத்து விட்டது; விடுவீர்களா...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலர் மீனாட்சிசுந்தரம் அறிக்கை: மத்திய பட்டியலில் இப்போது இருக்கும் கல்வியை, மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்தியும், மத்திய அரசின் புதிய கல்வித்திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும், வரும், டிச., 4ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X