தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே வாகனம் மோதி இறந்து கிடந்த அடையாளம் தெரியாத மூதாட்டி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தியாகதுருகம் அடுத்த வீரசோழபுரம் பஸ் நிறுத்தத்தில் கடந்த 26ம் தேதி இரவு 8 மணியளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, 60 வயது மதிக்கக்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார்.இதுபற்றி தகவலறிந்த தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மூதாட்டியின் உடலை கைப்பற்றி இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.