சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

40 ஆக உயரப் போகிறது மாவட்டங்களின் எண்ணிக்கை!

Added : நவ 30, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
40 ஆக உயரப் போகிறது மாவட்டங்களின் எண்ணிக்கை!''நாயரே, சூடா வெங்காய போண்டா போடும்... சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்த குப்பண்ணாவிடம், ''வெங்காயம் விக்கிற விலையில, வெங்காய தோல்ல கூட போண்டா போட முடியாது வே... ''நாயரை கிண்டல் பண்ணாம, இருக்கிறதை எடுத்து சாப்பிடும்...'' என, ஜாலியாக கண்டித்தார், அண்ணாச்சி.''அது சரி...'' என, மெதுவடையை எடுத்து
 40 ஆக உயரப் போகிறது மாவட்டங்களின் எண்ணிக்கை!

40 ஆக உயரப் போகிறது மாவட்டங்களின் எண்ணிக்கை!

''நாயரே, சூடா வெங்காய போண்டா போடும்... சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்த குப்பண்ணாவிடம், ''வெங்காயம் விக்கிற விலையில, வெங்காய தோல்ல கூட போண்டா போட முடியாது வே... ''நாயரை கிண்டல் பண்ணாம, இருக்கிறதை எடுத்து சாப்பிடும்...'' என, ஜாலியாக கண்டித்தார், அண்ணாச்சி.''அது சரி...'' என, மெதுவடையை எடுத்து கடித்தபடியே, ''தேதியை எப்ப அறிவிப்பான்னு, பக்தர்கள் எதிர்பார்த்துண்டு இருக்கா ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார், குப்பண்ணா.''என்ன விஷயமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம், 2020 பிப்ரவரி, 5ம் தேதி நடக்கும்ன்னு தகவல் வெளியாகியிருக்கு... அதுக்கு ஏத்த மாதிரி, புனரமைப்பு பணிகளும் நடந்துண்டு இருக்கு ஓய்...''ஆனா, அன்னைக்கு தான் கும்பாபிஷேகம் நடக்கும்ன்னு, அரசு தரப்புல, அதிகாரபூர்வமா இதுவரை அறிவிப்பு வெளியாகலை... 'பெரிய கோவிலுக்கும், ஆளுங்கட்சிக்கும் ஆகாதுங்கிற, 'சென்டிமென்ட்' காரணமா, அரசு இதுல பெருசா ஆர்வம் காட்டலை'ன்னு பக்தர்கள் புலம்பறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.''வேலையில இருந்து, 'ரிடையர்' ஆகிட்டாலும், அதே வேலையை செஞ்சிட்டு இருக்கார்னு சொல்றாங்க...'' என, அடுத்த தகவலுக்கு தடம் மாறினார், அந்தோணிசாமி.''யாருவே அது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''மதுரை மாநகர நுண்ணறிவு பிரிவு போலீஸ்ல, உதவி கமிஷனரா பணியாற்றி, சமீபத்துல, 'ரிடையர்' ஆனவர், குமரவேல்... இவர் பார்க்க, நடிகர் ரஜினிகாந்த் ஜாடையில இருக்கிறதால, 'ரஜினி' குமரவேல்னு தான் அதிகாரிகள் கூப்பிடுவாங்க...''ரிடையர் ஆன கையோட, ரஜினி மக்கள் மன்றத்துல ஐக்கியமாகிட்டாருங்க... மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துல கலந்துக்கிறவர், அங்க, யார் யார், என்ன பேசுறாங்கன்னு, 'வேவு' பார்த்து, மன்ற மேலிடத்துக்கு அனுப்பிடுறதா சொல்றாங்க... ''இதனால, குமரவேல் வந்தாலே, எல்லாரும் வாயை இறுக்கமா மூடிக்கிறாங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.''இதோட முடியப் போறது இல்லை... இன்னும் பிரிக்கப் போறாங்க பா...'' என, கடைசி தகவலை கையில் எடுத்தார், அன்வர்பாய்.''என்னத்தை, யாருவே பிரிக்கப் போறா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''தமிழகத்துல, 32 மாவட்டங்கள் இருந்துச்சு... முதல்வர், இ.பி.எஸ்., புதுசா அஞ்சு மாவட்டங்களை உருவாக்கியிருக்காரே... இன்னைய தேதிக்கு, தமிழகத்துல, 37 மாவட்டங்கள் இருக்கு பா...''இன்னும் சில மாவட்டங்களையும் பிரிக்க, முதல்வர் திட்டம் வச்சிருக்கார்... நாகையை பிரிச்சு, மயிலாடுதுறை, திருவள்ளூரை பிரிச்சி, பொன்னேரி மாவட்டத்தை சீக்கிரமே அறிவிக்க போறாரு பா...''அதே மாதிரி, சேலம் மாவட்டத்தை பிரிக்கணும்னு ராமதாஸ் வச்ச கோரிக்கையையும், முதல்வர் நிறைவேத்த இருக்காராம்... இந்த வகையில, மாவட்டங்கள் எண்ணிக்கை, 40 ஆக உயரப் போகுது பா...''என்றார் அன்வர்பாய்.''மாவட்டங்கள் சின்னதா இருக்கறது, நிர்வாக வசதிக்கு நல்லது தானே ஓய்...'' என்றபடியே குப்பண்ணா கிளம்ப, பெரியவர்களும் எழுந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
30-நவ-201913:29:04 IST Report Abuse
Harinathan Krishnanandam பேசாமல் அனைத்து வட்டங்களையும் மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்து விடலாம்
Rate this:
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
30-நவ-201913:10:32 IST Report Abuse
s.rajagopalan எது எப்படியோ ...வருமானம் உயரும் ....அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் .... ஆடத்தெரியாதவள் முற்றம் கோணல் என்றாளாம் ஆக்க பூர்வமாக செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் பெரிய மாவட்டம், சிறிய மாவத்தம் என்ற போச்சிற்கே இடமில்லை . இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. எல்லா ஜாதிகளுக்கும் சம பங்கு கிடைக்க ......?
Rate this:
Cancel
Gopal - Nalla Oor,யூ.எஸ்.ஏ
30-நவ-201911:32:06 IST Report Abuse
Gopal அப்படியே ADMK வையும் இரண்டாக பிரிக்கவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X